புத்தாண்டு வந்தாச்சு
புத்தாண்டு வந்தாச்சு புத்தாண்டு வந்தாச்சு. புதிய டைரி வாங்கியாச்சு. புதுப்பக்கங்களில் புதுப்புது தீர்மானங்கள் எழுதி வைச்சாச்சு. நான்கு நாட்களுக்கு புது டைரியைப் புரட்டுவதும் எழுதுவதும் நான் அது செய்ய மாட்டேன் இது செய்ய மாட்டேன் என்று நிமிடத்திற்கு நாலு முறை நினைவு படுத்துவதும் என்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அப்புறம்? அப்புறம் என்ன? பழையபடி எல்லாம் முன்பு நடந்தது போல்தான் நடக்கும். புது டைரி வாங்கி எழுதுவதும் புதிய தீர்மானங்கள் எடுப்பதும் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றாகிப் போகிறது. இது நான். ஆனாலும் சிலரிடமிருந்து வேறுவிதமாக மனதின் ஒலி நேரடியாக ஒலிபரப்பட்டு வருவதைக் கேட்க முடிகிறது. புதிய தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம். பார்த்துக்கொண்டே இருங்கள்.நாளையிலிருந்து நான் புதிய ஆள் என்ற பேச்சு காற்றோடு என் காதுவரை வந்தாச்சு. என் காதுகளுக்கு மட்டுமா வந்திருக்கும்.? அனைவர் காதுகளுக்கும் கண்டிப்பாக வந்திருக்கும். இந்தப் புத்தாண்டில் நான் அப்படி இருப்பேன். இப்படி இருப்பேன் என்று ஆளுக்கொரு உருட்டு உருட்டிக் கொண்டிருப்பர். ஆனால் என்னடி மீனாட்சி ...