Posts

Showing posts with the label காளமேகத்தின் எழுத்து விளையாட்டு

காளமேகத்தின் எழுத்து விளையாட்டு

காளமேகத்தின் எழுத்து விளையாட்டு  பொருளற்ற ஒற்றை எழுத்தை அடுக்கி வைத்து பொருள் உள்ள பாடல் புனையநல்ல கவித்துவம் வேண்டும். 'து 'வரிசையில் பாடுக.' தா 'வரிசையில் பாடுக என்று எளிதாகச் சொல்லிவிடலாம். வெறுமனே எழுத்தை அடுக்கி வைத்தால் போதுமா? பொருள் இருக்க வேண்டும். கவித்துவம் இருக்க வேண்டும். எழுத்தை வைத்து  விளையாட்டுக்காட்டி மகிழ்வதில் சிலருக்கு ஆசை இருக்கும். உண்டு. காளமேகத்திடம் இப்படியொரு விளையாட்டு விளையாட பார்க்க ஒருவருக்கு ஆசை. தனது ஆசையை காளமேகம்  முன்னர்  வைத்தார். "அதனால் என்ன பாடி விட்டால் போயிற்று. எந்த எழுத்தொடு விளையாட வேண்டும்" என்று கேட்டார் காளமேகம். 'டுடுடு 'என்று சாதாரணமாக சொல்லிவிட்டார் அந்த மனிதர். வெறும் 'டு'வை வைத்து எப்படி பாடல் பாட முடியும் என்றுதானே நினைக்கிறீர்கள். காளமேகத்திடமேயேவா? பாடல் உங்களுக்காக... " ஓகாமா வீதோநே ரொக்க டுடுடுடுடு நாகர் குடந்தை நகர்க்கதிபர் - வாகாய் எடுப்பர், நடமிடவர், ஏறுவர்அன் பர்க்குக் கொடுப்பர், அணிவர் குழை' என்று பாடி  அசத்திவிட்டார் காளமேகம். 'டு 'என்ற எழுத்துக்குத் தனித்த பொருள் ...