நீர் கிழிய எய்த வீடுப்போல
நீர் கிழிய எய்த வீடுப்போல..... தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் " என்றார் வள்ளுவர். ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் கோபம் வராமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்படிக் காத்துக்கொள்ளாவிட்டால் அந்தக் கோபமே அவனை அழித்துவிடும். அப்படியானால் கோபப்படக் கூடாதா? கோபம் இவ்வளவு பெரிய தீமையைச் செய்ய வல்லதா? கோபப்படாமல் ஒரு சாதாரண மனிதனால் இருக்க முடியுமா? " ரௌத்திரம் பழகு "என்றார் பாரதி. அதுவும் ஒருவிதத்தில் கோபம் தானே.... இப்படிப்பட்ட கேள்விகள் எழாமலில்லை. சினம் சேர்ந்தாரைக் கொல்லி என்று படித்திருக்கிறோம். " தன்னை அடக்கி, கோபத்துக்கு ஆட்படுத்தாமல் இருப்பவனே மாவீரன்" என்பார் நபிகள் நாயகம். "கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு அமருவான்" என்பது பழமொழி. இப்படி கோபத்தைப்பற்றி ஏராளமாகக் தெரிந்து வைத்திருந்தாலும் இன்னும் அறிய ஆசை. வேறு யாரிடம் கேட்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது ஔவை மூதுரையில் சொன்ன பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. பாடல் உங்களுக்காக.... " கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்...