மொத்த யானைகள் எத்தனை
மொத்த யானைகள் எத்தனை நானும் என் தம்பியும் ஓய்வு நாளை மகிழ்ச்சியாகக் களிப்பதற்காக காட்டிற்குச் சென்றோம். போகும் வழி எங்கும் கண்முன் நிற்கும் எழில்மிகு காட்சிகளைப் படம் பிடித்துக்கொண்டே நடந்தோம். பறவைகளின் கீச்கீச்சென்ற ஒலியும் வண்டுகளின் ரீங்காரமும் மனதைக் கொள்ளை கொண்டன. திடீரென்று குன்றுகள் நகர்ந்து வருவது போன்ற ஒரு காட்சி. படம்பிடிக்க நினைத்தபோது தான் தெரிந்தது அவை குன்றுகளல்ல யானை கூட்டம் என்பது புரிந்தது. அப்படியே கிலிபிடித்தபடி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டான் என் தம்பி. ஒருபோதும் இத்தனை யானைகள் கூட்டமாக வருவதை நானும் பார்த்ததில்லை. எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. என்ன செய்வது? இருவரும் ஓடி விடலாமா என்று ஒரு கணம் நினைத்தோம். இருந்தாலும் காட்டைச் சுற்றிப் பார்க்காமல் அப்படியே திரும்பிச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று ஒரு அசட்டுத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, "தம்பி வா! இந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வோம். யானைகளால் மரம் ஏற முடியாது. அதனால் பத்திரமாக யானைகள் கடந்து ப...