கிட்டாதாயின் வெட்டென மற
கிட்டாதாயின் வெட்டென மற கொன்றை வேந்தன் என்றதும், " அ ன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" "ஆ லயம் தொழுவது சாலவும் நன்று " "இ ல்லற மல்லது நல்லற மன்று " "ஈ யார் தேட்டைத் தீயார் கொள்வர் " "உ ண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு " "ஊ ருடன் பகைக்கின் வேருடன் கெடும் " "எ ண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்" போன்ற வரிகள் வரிசைகட்டி வந்து நிற்கும். அதில், "கிட்டாதாயின் வெட்டென மற "என்ற ஒரு வரியையும் ஔவை சொல்லியிருப்பார். மனப்பாடமாகப் படித்த வரி இன்றுவரை நம் நினைவில் நிலைத்திருக்கும் அருமையான வரி. அனைவரும் படித்திருக்கிறோம். பொருளும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அது இளமையிலேயே எதற்காகச் சொல்லித் தரப்பட்டது ? என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? "இளமையில் கல்வி பசுமரத்தாணி " இளமையில் விழுமியங்கள் வாழ்வியல் நீதிக் கருத்துக்கள் விதைப்பட்டால் அது காலத்துக்கும் நம் நினைவில் இருக்கும். அதன்படி நடக்க வேண்டும் என்ற எண்ணத...