Posts

Showing posts with the label உருவக அணி -ஏகதேச உருவக அணி-இலக்கணம்

உருவக அணி -ஏகதேச உருவக அணி

உருவக அணி-ஏகதேச உருவக அணி உருவக அணி மற்றும் ஏகதேச உருவக அணி இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் இரண்டு அணிகளையும் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வோம். உருவக அணி: உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது போன்று கூறுவது உருவக அணி எனப்படும். அதாவது ஒரு கவிஞர் ஒரு பொருளை சிறப்பித்துப் சொல்ல விரும்புகிறார். அதற்காக வேறொரு பொருளை உவமையாக எடுத்துக் கூறி அதோனோடு ஒப்புமைபடுத்திக் கூறுவார். அந்த உவமையின் தன்மையைச் சொல்ல வந்தப் பொருளின்மீது ஏற்றிக் கூறுவது உருவகம் எனப்படும். " இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டும் வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்" இப்பாடலில் இன்சொல் விளைநிலமாக ஈதல் விதையாக வன்சொல் களையாக வாய்மை. எருவாக அன்பு நீராக அறம் கதிராக அப்படியே உருவகப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு முற்றிலும் உருவகப்படுத்திக்  கூறப்பட்டுள்ளதால் இது உருவக அணியாயிற்று. ஏகதேச உருவக அணி இரண்டுபொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப் படுத்திவிட்டு மற்றொன்றை உருவகப் படுத்தாமல் அப்படியே விட்...