காந்தி மேலாடை துறந்த கதை
காந்தி மேலாடை துறந்த கதை , காந்தியின் மேலாடையைத் துறக்க வைத்த நிகழ்வு நடைபெற காரணமாக இருந்த இடம் மதுரை. வெளிநாட்டில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி அதுவரை ஆடம்பர ஆடை அணிந்தவராக மக்களைச் சந்தித்து வந்தார். ஒரே நாளில் காந்தி தன்னை முற்றிலுமாக மாற்றி அரை நிர்வாண நிலைக்கு மாறிவிடவில்லை. இவை எல்லாம் படிப்படியாக நிகழ்ந்தது. ஒருமுறை சம்பராண் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்க காந்தி மோதிஹாரி என்ற ரயில் நிலையம் வந்தடைந்தார். அப்போது காந்தியைப் பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.அவர்களுள் பலர் மேலாடை இல்லாமல் இருந்தனர். அது காந்தியடிகள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தியடிகளைச் சந்திக்க வந்த தொழிலாளிகள் தங்கள் கஷ்டங்களை எடுத்துரைத்தனர். தங்களுக்கு ஆலை நிர்வாகம் பல நெருக்கடிகளைத் தருவதாகக் கூறினர். அவர்கள் காலணி அணிய ஆலை நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர். காலணி அணியாமல் ஒரு மனிதன் நடப்பதில் உள்ள சிரமத்தைப் புரிந்துகொண்டார் காந்தியடிகள். இனி தானும் காலணி அணியப் போவதில்லை என அன்றைய தினம...