அன்னக்கிளி அக்கா
அன்னக்கிளி அக்கா விசயத்தைக் கேள்விப்பட்ட நேரத்தில் இருந்து அழுது கொண்டே இருந்தாள் அன்னக்கிளி அக்கா. "நிஜமாத்தான் சொல்லுறீயளா... யாரு சொன்னா...மாப்பிள்ளை சொன்னாவளா அவுங்க ஆத்தாகாரி சொன்னாவளா..." அப்பா வந்து சொன்ன நேரத்தில் இருந்து அப்பாவை கேள்வி கேட்டுக் கேட்டு குடைந்து எடுத்து விட்டார் அம்மா. " என்ன ....யாதுன்னு சொல்லிபுட்டேன்ல்ல... இனி ஆக வேண்டியதைப் பாரக்க வேண்டியதுதான்" சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தார் அப்பா. "என்ன சொல்றிய...சட்டியா? பானையா? உடனே மாப்பிள்ளை சொல்ற மாதிரி மாத்துகிறதுக்கு...." வார்த்தைகளைக் குறுக்கே போட்டு அப்பாவைப் போக விடாமல் தடுத்தார் அம்மா. "பின்ன என்னை என்ன செய்யச் சொல்லுற..." அப்பாவின் குரலில் ஒரு இயலாமை தெரிந்தது. என்ன செய்ய முடியும்? வேறு எப்படித்தான் சொல்ல முடியும் ? அன்னக்கிளி அவரு பெத்த புள்ளதானே... வருத்தம் இல்லாமலா இருக்கும்... "ஐயோ...நல்ல நல்ல சம்பந்தம் எல்லாம் வந்துதே....நீங்க தானே... நல்ல தோட்டமும் தொரவும் இருக்...