Posts

Showing posts with the label உளவியல் கட்டுரை

மௌனம் பேசும்

மௌனம் பேசுமா?  வாய் திறந்து பேசுவதுதானே பேச்சு...  மௌனம் எப்படி பேசியிருக்க முடியும்...  மௌனம் இதுவரை பேசியதும் இல்லை  பேசப் போவதும்  இல்லை.  இது நமது கணிப்பு.    பேசிய வார்த்தைக்கு ஒரு அர்த்தம்.  பேசாத வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம்  கற்பிக்கப்படும்.    ஒருவரோடு சண்டை போடும்போது எதிராளி  அமைதியாகப் போய்விட்டால்...  அதற்கு எதிராளி தாழ்ந்து போய்விட்டார்.  தனது இயலாமையை ஒத்துக் கொண்டு  பேசாமல் போய்விட்டார் என்று நினைப்போம்.  அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று  போயிருப்பாரோ என்று நினைப்போம்.    இன்னும் நான்கு பேரைக் கூட்டி வருவதற்காக  சென்றிருப்பாரோ...  என்ன நடக்கும் என்று பார்ப்பதற்காக ஆவலோடு  காத்திருப்போம்.  அதுவும் நடக்கலியா... ஏதோ வன்மம் வைத்துக்  கொண்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்று  புரிந்து கொள்வோம்.  அதுவும் இல்லையா...எதுக்குமே லாயக்கில்லாதவர்  என முத்திரை குத்திவிட்டு நம்போக்கில்  போய்க் கொண்டே இருப்போம்.  அதுவும் இல்லையா....

பொறாமை வேண்டாமே!

Image
          பொறாமை வேண்டாமே... "பொறாமையா.....எனக்கா...அது எங்கங்க கிடைக்கும்... "இப்படி சொல்கிற பருவம் குழந்தைப்பருவம். அதன்பிறகு பள்ளிக்குள் நுழைந்ததுமே உடன் பயிலும் மாணவர்மீது அப்பப்போ பொறாமைப்படும் சூழல் வந்துவிடும். நம்மிடம் இல்லாத ஒன்று இன்னொருவன் கையில் இருந்தால் மெதுவாக பொறாமை வந்து எட்டிப் பார்க்கும். அதே போன்ற ஒன்று தனக்கும் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடிக்க வைக்கும். வளர வளர பொறாமையும் கூடவே வளர்ந்து கொண்டு இருக்கும். பொறாமை உள்ளவர்கள் அடுத்தவர் படும் துன்பத்தைப் பார்த்து அதில் மகிழ்ச்சி கிடைக்கிறதா என்று பார்ப்பார்கள். நம்மிடம் இல்லாத  ஒன்று... நமக்கு கிடைக்காத ஒன்று... நாம் அடைய விரும்பும் ஒன்று... இன்னொருவரிடம் இருந்தால் ஒருமாதிரியான எரிச்சல் உணர்வு வந்து எட்டிப்பார்க்கும். அவரைப் பற்றித் தரக்குறைவாக பேச வைக்கும். அவரெல்லாம் அப்படி ஒன்றும் பெரிய ஆளல்ல என்று மட்டம்தட்டிப் பேசி இன்பம் காணும். பார்த்தும் பார்க்காததுபோல போக வைக்கும். முதுகுக்குப் பின்னால் இருந்து குத்த சந்தர்ப்பம் தேடிக் கொண்டே இருக்க...

பாராட்டுங்கள்

Image
                    வாழ்த்தும் பாராட்டும் வாழ்த்துங்கள். அது உங்களை வாழ்த்தும். பாராட்டுங்கள். அது  உங்களைப் பல பாராட்டுக்களுக்கு உரியவராக்கும்." " உலகுள்ளவரை உவகையோடு வாழ்க." இது ஒரு சாதாரண வாழ்த்து தான். ஆனால் இதன் தாக்கம் எவ்வளவு என்பது நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துகள் ஏதோ பொழுது போகாமல் கூறுகிறார்கள் என்று கூட நினைப்பவர்கள் உண்டு. சில சமயங்களில் கடனே என்று வாழ்த்துகள் அனுப்புவதும்  உண்டு. வாழ்த்துகள் கூறுவதற்கு அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. இது சோம்பேறித்தனமா அல்லது நாம் வாழ்த்தும் அளவுக்கு இவர் அப்படி ஒன்றும் பெரிய ஆளா என்ற நினைப்பா என்று சொல்லத் தெரியவில்லை. இதே போன்றுதான் பாராட்டவும் பலமுறை தவறி விடுகிறோம். ஆனால் ஒவ்வொரு பாராட்டும் நம்மில் எப்படி எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.... இல்லை ...இல்லை.. தூக்கி நிறுத்தி இருக்கிறது என்பதைச்  சற்றே பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் புரியும். அம்மா  மடியில் படுத்திருக்கும்போது அம்மாவி...

மனசு பூப்போன்றது

Image
                மனசு பூப்போன்றது மனசு பூப்போன்றது...  காதலிப்பவர்கள் பேசும் பேச்சு.     வெள்ளை மனது. ....  வெள்ளந்தியானவர்களைப்  பார்த்து நாம் கூறுவது.    கல் மனது ....கொடுமைக்காரர்களைப்   பற்றிய   நமது விமர்சனம்.      கடலாழம் கண்டாலும் கன்னி    மனஆழம் காணமுடியாது ....   புரியா புதிரான பெண்களுக்காக    நாம் உருவாக்கி    வைத்திருக்கும் புதுமொழி.      எது எப்படியோ மனசு எப்படி   என்று யாராலும்    எளிதில் கணிக்க முடியாது.      பூவுக்குள்ளும் பூ நாகம் இருக்கலாம் .   கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கலாம்.      கணினியாலும் கணிக்க    முடியாத ஒன்று மனது.   அதனை நம்மால் மட்டும்    கணித்துவிட முடியுமா என்ன?      எல்லோருடைய மனதையும்    புரிந்து கொண்டுவிட்டால்    நாட்டில் பிரச்சினையே எழாதே...      புரிந்து கொள்ள மு...