Posts

Showing posts with the label காக்கை கரவா கரைந்துண்ணும்...

காக்கை கரவா கரைந்துண்ணும்.....

Image
  காக்கை கரவா கரைந்துண்ணும்.... "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ  ரார்க்கே உள "                            குறள் :  527 காக்கை  _ காகம் கரவா _  மறைக்காமல் கரைந்து _ கூவி அழைத்து உண்ணும் _ தின்னும் ஆக்கமும் _ உயர்வும் ,வளர்ச்சியும் அன்ன _ அது போன்ற நீரார்க்கே _ தன்மை கொண்டவருக்கே உள _ உள்ளன  ,  இருக்கின்றன காகம் தனக்கு உணவு கிடைத்ததும்  அதை மறைத்து வைக்காமல் தன்  இனத்தைக் கூவி அழைத்து சேர்ந்து உண்ணும்.அதுபோல   அப்படிப்பட்ட குணம் கொண்டவருக்கு   மட்டுமே உலகில் உயர்வு வந்து சேரும். விளக்கம் : காகம் தனக்கு உணவு கிடைத்துவிட்டது என்பதற்காக அதை மறைத்து வைத்து உண்ணுவதில்லை. தன் இனத்தைக் கூவி அழைத்து அனைவரும் வந்த பின்னரே கூடி அமர்ந்து உண்ணும். கூடி உண்ணும் நற்பண்பு காகங்களிடம் இயல்பாகவே காணப்படும் நற்பண்பு. அதுபோல செல்வம் கிடைத்த போது அதனைத் தனக்கு மட்டுமே உரிய பொருள் என்று கருதாது பிறருடன்  பகிர்ந்து கொள்ளும் பண்பு  ஒருவருக்கு இரு...