Posts

Showing posts with the label நாய் பெற்ற தெங்கம் பழம் -பழமொழி நானூறு

நாய் பெற்ற தெங்கம் பழம்

நாய் பெற்ற தெங்கம் பழம்  நல்ல வாய்ப்பு சரியான நபரிடம் வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லாது போனால் அது பயனில்லாது போகும். ஓர் ஊரில் ஒரு ஏழை விவசாயி  இருந்தார். நித்தம் தோட்டத்தில் போய் மாங்கு மாங்கென்று உழைப்பார். வேகாத வெயிலில் அவர் கஷ்டப்படுவதைப் பார்க்கிற அனைவரும் ஐயோ பாவம் என்று சொல்லி கடந்து போவர். ஒருநாள் அந்த நாட்டு ராஜா அந்தப் பக்கமாக மாறுவேடத்தில் வந்தார். அவருக்கு இந்த மனிதனைப் பார்க்க பாவமாக இருந்தது. உடனே தனது சேவகனிடம் சொல்லி அந்த மனிதரை அழைத்து வரச் சொன்னார். அந்த மனிதனை அழைத்து வந்து மன்னர் முன்பு நிறுத்தப்பட்டது. மன்னர்,"உனக்கு ஆயிரம் பொற்காசு வழங்குகிறேன். அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்" என்று கூறி பொற் காசுகளைப் பொட்டலமாக கட்டி அந்த மனிதரிடம் கொடுத்தார். "ஆயிரம் பொற்காசுகளா?" வியந்து போன மனிதர் அதை அப்படியே தன் வீட்டில் ஒரு மண்பானையில் வைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்துவிட்டார். ஆசை வரும்போதெல்லாம் அந்த பொற்காசுகளை எடுத்து எண்ணிப் எண்ணிப் பார்ப்பார். குலுக்கிக்குலுக்கிப் பார்த்து மகிழ்ச்சி கொள்வார். மறுபடியும் அதே போல பானையில் வைத்து மூடி வைத்துவிடுவார்...