கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்ப்....
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்..... " கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் " குறள் : 643 கேட்டார் - சொல்லைக் கேட்டவர் பிணிக்கும் - ஈர்க்கும், கட்டி இழுக்கும் தகையவாய் - இயல்பினை உடையனவாய் கேளாரும் - அச்சொல்லைக் கேட்காதவரும் வேட்ப - விரும்பும் வண்ணம் மொழிவதாம் - சொல்லப்படுவதாம் சொல் - சொல்வன்மை சொல்லும்போது அதனைக் கேட்டவரைத் தன்வயப்படுத்தும் தன்மை கொண்டதாய்க் கேட்காதவரையும் கேட்க விரும்பும் தன்மையை உருவாக்குவதாய் சொல்லப்படுவதே சொல்வன்மையாகும். விளக்கம் : ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்கும்போதோ அல்லது ஒரு பொருளைப்பற்றி அறிந்து கொள்ளும் முனைப்புடனோ பேசும்போது நாம் அவருக்குப் பதிலாகத் தரும் சொல் அல்லது உரை அவரை நம் பக்கமாக ஈர்க்கும் வண்ணம் இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது கேளாதவரையும் கேட்கத் தூண்டுவதாக இருப்பதே சொல்வன்மை ஆகும். அதாவது நாம் பேசும் பேச்சு கேட்பவரைக் கட்டி இழுக்கும் தன்மை கொண்டு இருத்தல் வேண்டும். அதுபோல ...