செவலக்காளை
செவலக்காளை ஆளாளுக்கு ஒன்றும் சொல்லாமல் நின்றால் எப்படி? நடந்தது நடந்து போச்சு...காலாகாலத்துல ஒரு மூக்கணாங்கயிறு போட்டுருந்தா இப்படி நடந்துருக்காது. கால சுத்திகிட்டு கெடந்திருக்கும். செய்ய வேண்டியத செய்யாம விட்டுபுட்டு இப்போ வந்து லொபோ..லொபோ என்று வாயிலும் வயிற்றிலும் அடிச்சுட்டு வந்து நின்னா எப்படி? கூட்டத்தின் மௌனம் கலைத்தார் சட்டாம் பிள்ளை. பாதிக்கப்பட்டவக நாலும் பேசத்தான் செய்வாக .நாம பொறுத்துத்தான் போவணும் . அதுக்காக உசுர பறிப்போன்னு நின்னா எப்படி?இப்படி ஆளாளுக்கு அறுவாவை கையில எடுத்தா .கடைசியில எந்த உயிர் தான் மிஞ்சும். சட்டாம்பிள்ளையிடமே சட்டம் பேசினார் இன்னொரு பெரியவர். இதுக்கு மேல நான் பேசுவதற்கு என்ன இருக்கு? ஐயா பெரியவுக பார்த்து என்ன சொல்லுராகளோ அதுக்கு கட்டுப்பட்டு தான் ஆகணும். பட்டும் படாமலும் சொல்லிவிட்டு அமர்ந்தார் கைப்பிள்...