Posts

Showing posts with the label பொறாமை

பொறாமை

Image
                        பொறாமை   ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு எப்போது பார்த்தாலும் அடுத்தவர் வயலைப் பார்த்துப் பொறாமைப்படுவதே  வழக்கம். பக்கத்து வயலில் கத்தரிச்செடி நட்டால்    இவரும் கத்தரிச் செடி நடுவார்.   அவர் வெண்டை வித்து ஊன்றினால் இவரும் வெண்டை வித்து ஊன்றி வைப்பார்.   அவர் செடிகளுக்குப் பூச்சி மருந்து அடித்தால்   இவரும் மருந்தடிப்பார். இரண்டு வயல்களுமே நன்றாக வளர்ந்து வந்தன . ஆனாலும் இந்த மனிதருக்குத் திருப்தியே   இருக்காது.     அவனைவிடவும் ஒரு பிடியாவது அதிகமாக   மகசூல் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரு வெறி   மனதில் வந்து உட்கார்ந்து கொண்டது.   "  இனி அவன் செய்வதுபோல் செய்யக் கூடாது.   அவன்போடும் உரத்தைவிட சற்று    அதிகமாகவே போட வேண்டும்.   நீர்ப் பாய்ச்சும்போதும் அவனைவிட   அதிக அளவு   நீர்ப் பாய்ச்ச வேண்டும் "   என்று தீர்மானித்தான்.     இப...

பொறாமை

                      பொறாமை சேவற்கோழி ஒன்று வயல்வெளியில் இரை பொறுக்கிக் கொண்டிருந்தது.     தொலைவில் பெட்டைகோழிகள் சில இரை தேடிக் கொண்டிருந்தன.     அவற்றோடு ஒப்பிடுகையில் சேவலின் தோற்றம் சற்று கம்பீரமாக தெரியும்.     நான் தான் அழகு என்று கொண்டையைக் கொண்டையை ஆட்டும் சேவல்.              நாளும் ஒரு தடவையாயாவது தன் அழகைப்பற்றி   தம்பட்டம் அடிக்காவிட்டால் சேவலுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருக்கும்.         இன்றும் அந்த பெருமையோடு  வயலைச் சுற்றி ச்சுற்றி வந்தது சேவல்.   தொலைவில்...      அங்கே...யாரது?     நம்பவே முடியவில்லையே.     எத்தனை அழகு? எத்தனை  அழகு? கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது  சேவல்.    தன்னைவிட  அழகான   ஒருவர் நம்ம ஏரியாவில் இருக்கலாமா?    கூடாது...