சேவல்
சேவல் கொக்கரக்கோ...கோ சேவற்கோழி நான்கைந்து முறை கூவிக் கொண்டிருந்தது. எரிச்சல்பட்ட பெட்டைக்கோழி " விடியும் முன் ஏன் இப்படி கூவி கூப்பாடு போடுறீங்க.. நாங்கள் எல்லாம் தூங்குறது கண்ணுக்குத் தெரியல...." என்று கத்தியது. " அடி பைத்தியக்காரி . உனக்கு தூக்கம் வந்தால் நீ போய் சத்தம் போடாமல் தூங்கு. அதற்குபோய் ஏன் இப்படி கனைக்கிற..." "நான் கனைக்கிறேனா... நான் கனைக்கிறேனா...." "சரி...சரி ...கோபப்படாத.... போய் தூங்கு... நான்என் வேலைய பார்க்கிறேன்..." "வேலை....பொல்லாத வேலை... கால்காசுக்கு பயனில்லாத வேலை..." "என்ன சொன்னா...?.என்ன சொன்னா....? கால் காசுக்குப் பயனில்லையா...." "பின்ன...நீ கூவி....கூவி தொண்டைத் தண்ணி வற்றுறதுதான் மிச்சம் யாராவது ஒரு கை இரை போடுவாகளா... " " நான் கூவல என்றால் எப்படி விடியும்? இருட்டாகவே இருக்கும் பரவாயில்லையா" "ஆமா ...ஆமா நீங்க கூவி தான் பொழுது விடியுது" "நீ சொன்னாலும் சொல்லாவ...