திரும்பிப் பார்க்கிறேன்
திரும்பிப் பார்க்கிறேன் கடந்து வந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். பிரமிப்பாகத் தெரிகிறது. எத்தனை மேடு பள்ளங்கள். அத்தனையையும் தாண்டி ஒரு நதிபோல இன்றுவரை ஓட வேண்டும் என்று ஆசை. இடையிடையே குளமாக தேங்கி நின்றுவிடுகிறேன். குளமாகிப்போனால் மறுபடி வாய்க்காலில் தானே ஓட முடியும். அந்த வாய்க்கால் நீரோட்டமாகத்தான் என்னுடைய நடை இன்றுவரை சென்று கொண்டிருக்கிறது. நம்மோடு நடைபயின்ற எத்தனையோ பேருக்கு இந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விட்டது. முதலாவது நம்மை இதுவரைக்கும் கொண்டுவந்த இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நாம் இப்படி ஒருநாளை கொண்டாடுவோம் என்று எதிர்பார்த்தோமா? எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வரங்களை வழங்குபவன்தான் இறைவன்! கடந்த ஆண்டில் நாம் சொல்லிக் கொள்ளும்படி ஏதாவது செய்தோமா? இந்த 2022 ஜனவரி ஒன்று என்ற ஒரு இடத்தில் வந்து நிற்பதற்குமுன் வீழ்ந்து எழுந்து , வளைந்து நெளிந்து, முட்டி மோதி, தட்டுத்தடுமாறி அப்பப்பா எத்தனை தடைகள்! எத்துணைத் தடுமாற்றங்கள்! மனம் தடு...