Posts

Showing posts with the label மருவு இனிய சுற்றமும் -முதுரை பாடல் 29

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும்

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும்  "வா என்றால் வராது  போ என்றால் போகாது" இது போலவே மாறுபட்ட பொருளில்  பாடல் ஒன்று  என் கண்ணில் பட்டது. பாடலின்  வரிகள் என்னை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது. " ஆம்போது அவளோடு ஆகும் போம்போது அவளோடு போம்" அதுதான் அந்த வரி. வந்தவளே போனவளாக  ஆகும்போது என் செய்வது? எப்படி அழைத்து வருவது? யாரைத் தூது அனுப்புவது? தூதுபோக துணையாக அழைத்துவர  எவருமில்லை. வேறு வழியின்றி  வழியெல்லாம் விழியாய் மணித்துளிகளை விரயமாக்கி காத்துக் கிடக்கிறேன்  விழி பூத்துப் போனது விண்மீனும் கண் சிமிட்டி வீண் கதைப்பேசி கடந்து போனது. காது கொடுத்துக் கேட்க ஆளில்லை கருணை மனு ஒன்று கையிலேந்தி நிற்கிறேன். சட்டென்று ஒரு சலசலப்பு விருட்டென்று என் கையிலிருந்த மனுவைப் பறித்துப் பட்டென்று பறந்து போனது எட்டும்  தூரத்தில் உள்ள ஒரு தடுப்பில் தட்டி படத்துக் கிடந்தது தொட்டுவிட எண்ணி எட்டிக் கை வைத்தேன் கட்டிப்பிடித்தது ஒரு கை தட்டிப் பறிக்க வந்தவர் எவரோ? தடுமாறும் வேளையில்  தடையிட  முட்டுக்கட்டையிட முந்தி வந்து நிற்பவர் எவரோ ? ஓரக்கண்ணால் ப...