நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்....
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்.... நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும் " குறள் : 476 நுனி - முனை கொம்பர்- சிறிய கிளை ஏறினார் -ஏறியவர் அஃது-அது இறந்து-கடந்து ஊக்கின் - மேலும் முயன்றால் உயிர்க்கு-உயிருக்கு இறுதி-முடிவு ஆகி விடும் - அமைந்துவிடும் மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் அதையும் கடந்து மேலே செல்வேன் என்று ஏற முனைந்தால் அதுவே அவருடைய உயிர்க்கு இறுதியாக அமைந்துவிடும். விளக்கம் : மரத்தில் ஏறியவர் கிளையின் நுனி வரை சென்றுவிட்டார். அத்தோடு நின்றுவிடாமல் ஆர்வமிகுதியால் இன்னும் மேலே செல்வேன் என்று மேலே ஏறினால் கீழே விழுந்து உயிர்விட நேரிடும்.அதுபோல ஒரு எல்லைக்கு மேல் மேலும் என்னால் செய்ய முடியும் என்று ஏதோ ஒரு மன ஊக்க மிகுதியால் நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு செயலைச் செய்ய முனைந்தால் அது இறுதியில் துன்பத்தில்தான் முடியும். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. தன் ஆற்றலின் எல்லை அறிந்து செயல்பட வேண்டும். ஒரு மரத்தில் ஏறி கா...