நேரமில்லைக்கு நேரமில்லை
நேரமில்லைக்கு நேரமில்லை நேரமில்லைக்கு நேரமில்லையா? இது என்னப்பா வேடிக்கை. உண்மை தாங்க. நேரமில்லை என்று சொல்வதற்கே நேரமில்லை. சிலர் சதா சக்கரத்தைக் கால்களில் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு நின்று பேசக் கூட நேரமிருக்காது. இது ஒரு ரகம். இன்னொரு ரகத்தினர் உண்டு. எதற்கு எடுத்தாலும் எனக்கு நேரமில்லை என்று கூறி வேலையைத் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருப்பர். பள்ளிப் பருவத்தில் நேரமில்லை..நேரமில்லை...என்ற வார்த்தையைச் சொல்லி எப்படி எப்படி எல்லாம் விளையாட்டுக் காட்டியிருப்போம். நேரமில்லை.... இல்லை...இல்லை..இந்த வார்த்தையைப் பயன்படுத்தி யாரையெல்லாம் ஏமாற்றியிருப்போம். வீட்டுப் பாடம் எழுதி வரவில்லையா....உடனே ஒரு கதை வரும் பாருங்க.. நேற்று எங்க வீட்டுக்கு விருந்துக்காரங்க வந்துருந்த...