Posts

Showing posts with the label நல்லாரைக் காண்பதுவும் நன்றே-மூதுரை

நல்லாரைக் காண்பதுவும் நன்றே

நட்பு என்றால் இணக்கமாக நடந்து கொள்வது. ஒருவர் கருத்தோடு ஒருவர் ஒத்துப் போவது. இணக்கம் எப்போது யார்மாட்டு  ஏற்படும்? ஒத்த கருத்துடையோரிடம் இணக்கம் ஏற்படலாம். ஒத்த வயதினரோடு இணக்கம் ஏற்படலாம். ஒரே இடத்தில் வேலை செய்வோரிடம் இணக்கம் ஏற்படலாம். ஒத்த தொழில் புரிவோரிடையே இணக்கம் ஏற்படலாம். இது சூழல் காரணமாக ஏற்படும் இணக்கம். இந்த இணக்கம் நல்லதா? இந்த இணக்கத்தினால் ஏதேனும் நன்மை பயக்குமா? உறுதியாகச் சொல்ல முடியாது. நன்மை  இருக்கலாம். அதனால்தானே இணக்கமாக இருக்கிறோம். போக்குவரத்து வசதிக்காக பேச்சுத்துணைக்காக தொழில் முன்னேற்றத்திற்காக  என்று ஏதோ ஒரு காரணம் கருதி வந்த இந்த  இணக்கம்  கடைசிவரை  தொடருமா? உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால்தான் இது நன்று என்று முடிவு செய்யப்படவில்லை. ஆனால்  ஔவை இவை இவை எல்லாம் நன்று என்று ஒரு பட்டியல் தருகிறார் . இப்போது யாரோடு இணக்கமாக இருப்பது நன்று என்றும் கூறுகிறார் கேளுங்கள். இதோ பாடல் உங்களுக்காக.. " நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும்  நன்றே அவரோடு இணங்கி இருப்பத...