ஏழு எழுபதுமுறை
ஏழு எழுபதுமுறை போஸ்ட்....என்ற போஸ்ட்மேனின் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவந்தேன். போஸ்ட்மேன் கவரைக் கையில் கொடுத்து விட்டுத் திரும்பு முன்னே வீட்டுக்குள் துள்ளிக் குதித்து ஓடிப்போய் அம்மா முன் நின்றேன். "அம்மா... எனக்கு வேலை கிடச்சிருக்கு..." " எங்க..எங்க... காட்டு" ஓடி வந்து கையில் இருந்த கவரைப் பிடித்து இழுத்தாள் தங்கை. "போ... ...போ ...அம்மா...வான்னா..." சத்தம் போட்டபடியே அம்மா இருக்கும் இடத்திற்கு வந்தேன். " ஏன் கத்துற... முதலாவது கவரை பிரிச்சிப் பாரு...அதற்குமுன் எதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுரா...." சாதாரணமாகச் சொல்லிவிட்டு கடந்துபோனார் அம்மா. "வா ...வா.. எங்கே போற.....என் கிட்ட இரு." அம்மாவை வலுக்கட்டாயமாக இழுத்து பக்கத்தில் அமர்த்தி வைத்துவிட்டுக் கவரைப் பிரித்தேன். அப்படியே தூக்கிவாரிப் போட்டது. "ஆ....என்ன இது ....இன்டர்வியூக்கு வரச் சொல்லி இருக்கு" " எங்கிருந்து.. வந்திருக்குது.... அதைச் சொல்லு முதல்ல" முந்திரிக்கொட்டையாட்டும் முன்னே வந்து நின்று கேள்வி கேட்டாள் தங...