மகிழ்ச்சியைத் தேடி....
மகிழ்ச்சியைத் தேடி...... அனைவருக்கும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசை. ஆனால் எது மகிழ்ச்சி என்று அறிவதில்தான் சிக்கல். சிலருக்கு பணம் நிறைய தேடினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கும். இன்னும் சிலருக்கு நல்ல பதவி இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தோன்றும். சிலர் அழகாக இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைப்பர். நிறைய படித்துவிட்டவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைப்பவர்களும் உண்டு. இப்படி ஆளாளுக்கு மகிழ்ச்சியைப்பற்றி வெவ்வேறு கண்ணோட்டம் இருக்கும். எங்கே மகிழ்ச்சி.... எங்கே மகிழ்ச்சி என்று ஆளாளுக்கு நாலாபக்கமும் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள்தான் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. ஒத்துக் கொள்வதுமில்லை. வெளியில் தேடிக்கொண்டிருப்பதால்தான் பல நேரங்களில் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட...