கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம் அனைவருக்கும் கூற்றம் என்றால் ஒரு நடுக்கம். கலக்கம். அச்சம். அந்தச் சொல்லைச் சொல்லாமலேயே கடந்து போய்விட வேண்டும் என்று நினைப்பர். நாம் நினைத்த நேரத்தில் வா என்றால் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் கூற்றுவன் என்ன நாம் வைத்த ஆளா? அது யாருப்பா? கூற்றுவன்? நீ கண்டியா...என்று யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். ஊ..ஹூம் என்று உதட்டைச் பிதுக்குவர். எமனோடு சென்று திரும்பிய யாராவது திரும்பி வந்து சாட்சி சொன்னால்தான் எமன் இருப்பதாக நம்புவோம். யாருக்கும் தெரியாத யாருமே பார்த்திராத ஒருவர்மேல் ஏன் இந்த அச்சம்? ஏனிந்த கலக்கம்? கூற்றமாவது ...கூற்றுவனாவது? கூட்டி வா அவனைக் கையோடு... கூற்றுவனோடு ஒரு நேர்காணல் வைத்து அவன் கூற்றைக் கேட்க வேண்டும். தெருக்கூத்து இது என்று தெரியவைத்திட வேண்டும். இப்படியொரு வீறாப்போடு நடந்தேன். "யார் சொன்னது யாருக்குமே கூற்றம் தெரியாது என்று...? பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்பது போலல்லவா இருக்கிறது!" இப்படி ஒரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன். திருதிருவென விழித்தேன். என் உள்ளத்தை அப்படியே படித்தவர...