Posts

Showing posts from April, 2025

தொல்காப்பியர் பார்வையில் ஆறறிவு

தொல்காப்பியர் பார்வையில் ஆறறிவு அறிவு என்றதுமே மனிதனுக்கு மட்டுமே உரியது. வேறு எந்த உயிருக்கும் அறிவு என்பதே கிடையாது என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் வேறு விலங்குகளையோ  உயிர்களையோ ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. செடிக்கு உயிருண்டு என்று படித்திருக்கிறோம். ஆனால் இலைகளைப் பறித்து வீசிக் கொண்டே செல்வோம். அவற்றிற்கும் உணர்வு உண்டு. உயிருண்டு  என்ற சிந்தனை எழுவதே இல்லை. நாயைக் கண்டதும் கல்லை எடுத்து வீசுவோம். நாய் பேச முடியாததால் அதற்கு என்ன அறிவு இருக்கப்போகிறது என்று மட்டமாக நினைத்துக் கொள்வோம். நான் கடிக்க வந்தால் மட்டும் பின்னகால் பிடறியில் அடிக்க ஓடுவோம். ஒரு செயலுக்கு எதிர்வினை ஆற்றும் திறன் இருந்தாலே அந்த உயிருக்கு அறிவு இருக்கிறது என்றுதானே கருதப்பட வேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? படித்தால் மட்டுமே அறிவு பெற முடியும். படிப்பறிவு பெற்றவர்கள் மட்டுமே அறிவுடைய வர்கள். புத்தகம் வாசிக்கத் தெரியாதவர்கள் அறிவற்றவர்கள். பணம் பண்ணத்  தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள். நல்ல பதவியில் இருப்பவர்கள் மேலான அறிவுடையவர்கள் என்று அறிவுக்கு ஒரு வரம்பு வைத்திருக்கிறோம். ...

மகாராஷ்டிரா நாள்

மகாராஷ்டிரா நாள்  மகாராஷ்டிரம் இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள  ஒரு  அருமையான பணப்புழக்கம் மிகுதியாக உள்ள ஒரு மாநிலம். மகாராஷ்டிரம் என்றதும் அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது அதன் தலைநகரான மும்பை என்றால் மிகையாகாது. வந்தோருக்கெல்லாம் வாழ்வளிக்கும் தமிழகம் போல வந்தோர்க்கெல்லாம் வாழ்வளிக்கும்   தொழில் வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது தலைநகர் மும்பை. இந்திய பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் தொழில் முனைவோர்கள் பெருமளவில் நிறைந்த மாநிலம். படித்தவர்களுக்கு மட்டுமல்ல படியாதோரையும் பசியாற வைக்கும் பன்முகத் தன்மை கொண்டது. மொழியறியா மக்களும்  பசியாற்றிக் கொள்ள தொழில்கள் ஏராளம் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.  1960ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இது பம்பாய் மாகாணமாகவே இருந்து வந்தது.   மாநில மறு சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மராட்டி மற்றும் கொங்கணி மொழி பெரும்பான்மையாகப்  பேசும் மக்கள் உள்ள  பகுதிகள் மகாராஷ்டிரம் என்றும் குஜராத்தி மொழி  பெரும்பான்மையாகப் பேசும் மக்கள் உள்ள  பகுதி குஜராத் என்றும் பிரிக...

தொல்காப்பியர் பார்வையில் ஆறறிவு

தொல்காப்பியர் பார்வையில் ஆறறிவு அறிவு என்றதுமே மனிதனுக்கு மட்டுமே உரியது. வேறு எந்த உயிருக்கும் அறிவு என்பதே கிடையாது என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் வேறு விலங்குகளையோ  உயிர்களையோ ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. செடிக்கு உயிருண்டு என்று படித்திருக்கிறோம். ஆனால் இலைகளைப் பறித்து வீசிக் கொண்டே செல்வோம். அவற்றிற்கும் உணர்வு உண்டு. உயிருண்டு  என்ற சிந்தனை எழுவதே இல்லை. நாயைக் கண்டதும் கல்லை எடுத்து வீசுவோம். நாய் பேச முடியாததால் அதற்கு என்ன அறிவு இருக்கப்போகிறது என்று மட்டமாக நினைத்துக் கொள்வோம். நான் கடிக்க வந்தால் மட்டும் பின்னகால் பிடறியில் அடிக்க ஓடுவோம். ஒரு செயலுக்கு எதிர்வினை ஆற்றும் திறன் இருந்தாலே அந்த உயிருக்கு அறிவு இருக்கிறது என்றுதானே கருதப்பட வேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? படித்தால் மட்டுமே அறிவு பெற முடியும். படிப்பறிவு பெற்றவர்கள் மட்டுமே அறிவுடையவர்கள். புத்தகம் வாசிக்கத் தெரியாதவர்கள் அறிவற்றவர்கள். பணம் பண்ணத்  தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள். நல்ல பதவியில் இருப்பவர்கள் மேலான அறிவுடையவர்கள் என்று அறிவுக்கு ஒரு வரம்பு வைத்திருக்கிறோம். மனிதர்...

நூற்றுக்கு நூறு

நூற்றுக்கு நூறு  மகுடம் சூட்டிய நாள்முதலாக மணிமுடியில் வைரக்கற்களென நாளொரு திட்டம்  தந்து மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி செய்கின்றீர்! தங்கள் திட்டங்கள் அத்தனையும் படைத்து வருகிறது  புதிய வரலாறு அதனால் பெற்றுவிட்டீர் மதிப்பெண் நூற்றுக்கு நூறு! புகுந்த வீட்டில் மகிழ்வாக வாழ்ந்தாலும் பிறந்தவீட்டுப் பெருமை பேசும் சராசரி பெண்ணாக  தமிழகம் என் தாய்வீடு என்பதில்  எனக்குப் பெருமிதம் உண்டு தாயை இழந்தபின்  தாய்வீட்டுப் பெருமை பேசுவதில் ஏது மதிப்பு? ஏதிலியான மனநிலைதான் எம்மிடம் எப்போதும் உண்டு! தாயின் மடிமீது அமர்ந்திருந்து நிலாச்சோறு உண்டிருக்கும் குழந்தையை ஏக்கத்தோடு பார்த்து நிற்கும் அண்டை வீட்டுக் குழந்தை போல ஏக்கத்தோடு தமிழகத்தைப் பார்த்து நின்றேன்! "புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் "என்ற  ஒற்றை அறிவிப்பைத் தந்து உலகத் தமிழரின் உள்ளங்களைக் கற்றையாய் அள்ளிக் கொண்டீர்! "வா..தாய்வீட்டு அரவணைப்பும் பாதுகாப்பும் உனக்கும் உண்டு" என்றுரைத்த உம் கரிசனத்தை என்னவென்பேன்?  ஏது சொல்லி பாராட்டுவேன்? நன்றி என்ற மூன்றெழுத்தைச் சொல்லி அந்நியப்பட்டு நிற்க மனமில்ல...

வள்ளுவரின் நான்குவரி பாடல்

வள்ளுவரின் நான்குவரி  பாடல் திருவள்ளுவர் என்றதும் நம் கண்முன் வந்து நிற்பது ஒன்றே முக்கால் அடி கொண்ட திருக்குறள் என்பது நம் அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. ஏழு சொற்கள் கொண்டது. எந்த இடத்திலும் குறள் வெண்பாவுக்கான இலக்கண மரபை உடைக்காத சொல்லாட்சித் திறன். பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட வரிகள். அதிகார அமைப்பிலும் பகுப்பிலும் ஓர் ஒழுங்கு கடைபிடிக்கப்பட்ட அமைப்பு. இப்படி வரம்புமீறாக் கவி படைத்துத் தந்த வள்ளுவர் தன் இலக்கண வரம்பைத்  தாண்டி நாலுவரிகளில் ஒரு பாடல் எழுதி வைத்துள்ளார். திருவள்ளுவர் நாலுவரியில் பாடல் எழுதியுள்ளாரா? ஆச்சரியமாக  இருக்கிறதல்லவா! அந்த நாலு வரியும் யாருக்காக எழுதப்பட்டது என அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். யாரவள் ? யாரவள்? வள்ளுவரை இலக்கண வரம்பை மீறி எழுத வைத்தவள் யாரவள் ? ஊருக்கெல்லாம் குறள் எழுதிய வள்ளுவர் தன் காதல் மனைவி வாசுகிக்காக எழுதிய பாடல்தான்  நான்கு வரிகள் கொண்டது. வள்ளுவர் தன் மனைவி வாசுகி  இறந்ததும் மனம் உடைந்து போனார். நொடிந்து போனார். நேற்றுவரை பார்த்துப் பார்த்து எல்லாம்  செய்து தந்தவள். ஒரு வார்த்தை எதிர்த்துப் ...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  வீரம் விளை நெல்லை சீமையில் வீசு பொருநைத் தென்றல் நடக்கும் வீதியெங்கும் சில்வண்டு  வீவீயென மெட்டிசைக்கும்  எழில் நகர் இலவங்குளத்தில் வீச்சறுவாள் மீசை மிடுக்கு நாயகன்  ஐயா சவரிமுத்து நாடார்  பாக்கியம் அம்மாள் இணையர்  மெத்தை மடியில் முத்தமிழ்ப் பயில முகம் பார்த்துத் தாலசைத்தார் நாயகன் மார்கண்டேய தாசன் ! அமைதியான நதியின் ஓடமாய்  உமாவோடு நடந்தது நல்வாழ்க்கை  பிள்ளை இருவர் கிடைத்த நல்வரம் கோநகர் மும்பையின் அடையாளம் கொள்கை பிடிப்பில் தனியாழம் தாய்த் தமிழின் சுவையாழம் தரணியெங்கும் தமிழ்தான் ஆளும் தணியாக் காதல் தமிழோடு நாளும் தமிழ் வளர்க்க வேண்டுமென்ற தாகம் தமிழ்ச் சங்கமாய்ப் பாண்டூப்பில் உதயம்! அறப்பணி பொதுப்பணி நலப்பணி ஆசிரியப்பணி  எப்பணி ஆற்றிடினும் களப்பணியாளன் என்பெயர் கணினியின் பதிவாய்  கற்றவர் கற்பவர்  நினைவாய் கல்மேல் எழுத்தாய்க்  காண்பவர் உச்சரிப்பாய்  கவனம்கொள் நிலைக் களனாய்  கருத்தியல் உருவாகிட வேண்டும் என்ற கனலும்  அனலாம் மந்திரம் கனன்றிட கடினஉழைப்பின் அடையாளமாயினார் தாசன்! உழைப்புக...

ஓடிக் கொண்டே இரு

 ஓடிக்கொண்டே இரு வாழ்க்கை  என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம் தான். இங்கு ஜெயிக்கிறவன்தான் கொண்டாடப்படுகிறான். தோற்றவர்கள் திரும்பி கூட பார்க்கப்படுவதில்லை. ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகளாக  தான் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் பின் தங்கி விட்டால் கூட  புறந்தள்ளப்படுவோம். வேண்டாம் என்று நிராகரிக்கபப்படுவோம்.  ஒரு குதிரை ஜெயிக்கலாம்.  ஒரு குதிரை தோற்கலாம்.  எல்லாம் கடந்து போகட்டும்.மறந்து போகட்டும் நான் ஜெயிக்கிற குதிரையாக இருக்க வேண்டும். இரவு என்றால் பகலும் உண்டு. எப்போதும் பகலாய் இருந்தால்  நிகழ்வுகள் மகிழ்ச்சியைக் கொடுக்காது. இரவாகவே இருந்து விட்டால் உலகம் தாங்காது. மாறி மாறி வரும்போதுதான் அடுத்தது என்ன .....அடுத்தது என்ற ஓர் எதிர்பார்ப்போடு வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும்.   மாற்றம் என்ற சொல்லைத் தவிர  இந்த உலகில் மாறாதது  என்று எதுவும் இல்லை. நேற்று பார்த்த செடி இன்றும் நாளையும் அப்படியே இருக்க வேண்டும்  என்று எதிர்பார்த்தால் அதன் பலனை எப்போது அனுபவிப்பது? நேற்று என் பெற்றோர் இப்படித்தான்   இருந...

முல்லையும் பூத்தியோ

முல்லையும் பூத்தியோ... "நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்  பெருமை உடைத்து இவ் வுலகு" என்றார் வள்ளுவர். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று சொல்லப்படும் நிலையாமை  ஆகிய பெருமை உடையது இவ்வுலகு. எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டார். உலகம் என்றால் ஆயிரம் இருக்கும். எதையும் தூக்கிச் சுமந்து மனதில் பாரத்தை ஏற்றிக் கொள்ளாமல்  சாதாரணமாக கடந்து போக வேண்டும். இது ஞானிகள் சொல்லித் தரும் பாடம். ஆனால் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களின் இழப்பை இப்படி எளிதாக கடந்து போக முடியுமா?  எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு நம்மால் கடந்து செல்ல முடிகிறதா? சில இழப்புகள் நம்மை புரட்டிப் போட்டு விடுகின்றன. காலனையே கேள்வி கேட்க வைக்கின்றன. காலத்தின் மீது கோபம்கொள்ளச்  செய்கின்றன. தாங்க முடியாமல் விம்மி விம்மி  அழ வைக்கின்றன. உள்ளுக்குள்ளேயே வெதும்பி வெதும்பி  ஒவ்வொரு நாளும் சாகாமல் சாக வைக்கின்றன. புலம்பி தவிக்க வைக்கின்றன. புரியாமல் விழி பிதுங்கி  நிற்க வைக்கின்றன. எழுதி முடிக்கப்படாப் புத்தகத்திற்கு முடிவுரை எழுதி பிழைக்கணக்கு செய்து விட்டாய் என...

நஞ்சு உடைமைதான் அறிந்து

நஞ்சு உடைமைதான் அறிந்து..... கரவிலா நெஞ்சத்தவர் யார்? இப்படியொரு கேள்வி வந்து  மண்டையில் ஏறி உட்கார்ந்து  அப்படிப்பட்ட நபரைத் தேட ஆரம்பித்தது. அந்தத் தேடலின்போது "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்." என்ற வள்ளலாரின் வரிகள் வந்து என்னைத் குறுக்கு விசாரணை செய்ய  ஆரம்பித்தது. குறுக்கும் நெடுக்கும் நடக்க வைத்தது. அதன் உண்மை தன்மையை அறியும் ஆவலில் அதைப்பற்றிய  கூடுதல் கேள்விகள் வந்து விடைகேட்டு  நிறுத்தி வைத்தது. மனதில் எதையும் மறைத்து வைக்காது வெளிப்படையாகப் பேசுபவர்கள் கரவிலா நெஞ்சத்தவர்  என்று முதலாவது கேள்விக்கு எனக்கு நானே விடை எழுதி வைத்துக் கொண்டேன். இப்போது வள்ளலாரின் வரிகள் என்னைத் துரத்த ஆரம்பித்தது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறவர்கள் ஆபத்தானவர்களா? ஏன் ....ஏன் அப்படியொரு வேண்டுதலை வள்ளலார் இறைவனிடம் வைத்தார்.? அவர்கள் உறவு வேண்டாம் என்று  விலகி ஓடும் அளவுக்கு அவர்கள் கொடுமையானவர்களா? வள்ளலாரின் வரிகள்  துரத்தத் துரத்த தேடல் அதிகமாகியது அப்படியானால்... உள்ளம் நினைப்பதை உதடு பேசாது என்பதைத்தான் இப்படி சொல்லியிருப்...

மனிதம் மாண்டதோ

மனிதம் மாண்டதோ மனிதம் மாண்டதோ மதமேறிப் போனதால் மானிடம் தடம்  மாறிப் போனதோ மாமலை உருகி மானிட குருதிக் குளியல் நடத்தி மருளும் காட்சி அரங்கேற்றி மரணபீதி கொடுத்தவர் எவரோ? மண்டு கவின் காட்சி கண்டு மகிழ வந்தவரை உண்டு உயிர் கொண்டு வண்டு உடலாட பெண்டு எழில் வாட செண்டு நிலை மாற கொடும்பாதகனாய் வந்து களியாட்டம் நடத்தியவர் எவரோ? ஏனிந்த கொலைவெறி யாரைப் பழி தீர்க்க சமரசம் எடுத்தீர் சமரசமில்லா இழிப்பிறவி சமூகம் செய்த குற்றம் யாதோ சமநிலை தவற வைத்ததெதுவோ  சகமனிதனை சடுதியில் சவக்குழிக்குள் தள்ளி  சங்கீதம் பாட வைத்தவர் எவரோ? கறை படிந்ததோ காஷ்மீர  மலைகள் கவினிழந்ததோ கண்கள் பொலிவிழந்தோ கன்னி மனம் நைந்ததால் கன்னலிழந்து எம்மை கையறுநிலை பாட வைத்து களையிழக்க வைத்தவர் எவரோ? மனிதம் மரித்ததோ  மானுடம் மடிந்ததால் மகிழ்ச்சிதான் தொலைந்ததோ கொண்டாட வந்தவரை திண்டாட வைத்து சண்டாளன் என்ற பெயர்  பெண்டோடு பெற்று உண்டாடி மகிழ்ந்தவர் எவரோ? கனவு தேச பிதாமகன்  கண்களை மூடியதால்  காட்சிகள் போர்க்களம் ஆனதுவோ கலையா எழிலைக் கலைய வைத்ததெவர் தவறோ கண்ணீரால் அஞ்சலி எழுதும் கடைசிவுரை இதுவாகட்டுமென...

பிச்சைக்கு மூத்தகுடி...

பிச்சைக்கு மூத்தகுடி.... "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்" "இவ்வுலகில் சிலருக்கு இரந்து உயிர்வாழவேண்டிய நிலையை இறைவன் ஏற்படுத்தியிருந்தால், அவனும் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக "என்று கோபமாக எழுதியிருப்பார் வள்ளுவர். பிச்சை எடுத்து வாழ்தல் இழிவானது. இதுதான் நம் அனைவரின் கருத்தாக இருக்கும். ஆனால் பிழைப்புக்கு ஏதும் வழியில்லை என்றால்  என்ன செய்ய்ய முடியும்? உழைக்கக் திறன் இருந்தும் இரந்து வாழ்வது வெறுக்கத்தக்கது. தவறான செயல். ஆனால் உழைக்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள்  என்ன செய்ய முடியும்? இருந்துதான் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படியொரு நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார்? படைத்தவனை அன்றி வேறு யாரை குறை சொல்ல முடியும்.? வெறுமனே குறை சொல்லிவிட்டுக் கடந்து போக வள்ளுவருக்கு மனம் வரவில்லை. "ஏன் இப்படிப் படைத்தாய்?" என்று கேள்வி கேட்கிறார். இவர்கள் இரந்து வாழ்வதற்கு நீதானே காரணம் ...அப்படியானால் அதற்கான தண்டனை உனக்கும் உண்டு. தண்டனையிலிருந்து நீயும் தப்ப முடியாது. நீயும் அவர்களைப்போல அலைந்து திரிந்து க...

நாற்பது வயதில் நாய்க்குணம்

நாற்பது வயதில் நாய்க்குணம் "நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்"         என்பார்கள். "பன்றி பண்பாடிழக்கலாம்   நாய் நன்றி மறக்கலாமா?" என்றும் கேட்பார்கள்.            "நாற்பது வயதில் நாய் குணம் அதை  நாம் தெரிஞ்சு நடக்கணும்  அறுபது வயதில்  சேய்  குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்       நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும் நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும் எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்"  இது கவிஞர் வாலியினுடைய பாடல். நாய்க்குணம் மாற்றிப் மாற்றிப் பேசுவதும் கோபம் கொள்வதுமா? இது புதிதாக இருக்கிறதே. நாற்பது வயதில் நாய்க்குணம் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அறுபது வயசில் சேய் குணம். அதாவது சிறுபிள்ளை போன்று மாறி விடுவராம் . அது உண்மை தான். சற்று மாற்றி யோசித்துப் பார்ப்போமே! நா   குணம்  என்பதைத்தான்   நாய்க்குணம்  என்று சொல்லி இருப்பார்களாக இருக்கலாம் .  நாற்பத...

ஈஸ்டர் வாழ்த்து

ஈஸ்டர் வாழ்த்து  கன்மலை பிளந்திட கல்லறை திறந்திட  கண்டவர்  சாட்சி பகர்ந்திட  கல்வாரி  வாக்கு மெய்ப்பட               சாவினை வென்றார்  சரித்திரம் படைத்தார்  உயிர்த்தார்  ...உயிர்த்தார்  உலகினை ஜெயித்தார்! எனக்காய் உனக்காய்  யாவர்க்குமாய் உயிர்விட்ட மீட்பர் உயிரோடு எழுந்தார் தோமாவுக்கு விலா எலும்பு சொல்லியது சாட்சி மன்னனுக்கு வெண்முட்டை செம்முட்டையாகியது சாட்சி மகிபன் ஏசு உயிர்த்தெழுந்தார் மகதலேனா முதற்சாட்சி மக்களுக்கு மனமே சாட்சி உயிர்த்த ஏசுவால் உலகிற்கு மீட்சி    அனைவருக்கும் ஈஸ்டர் நாளின் நல்வாழ்த்துகள்!