நற்றிணை நடத்திய நாடகம்
நற்றிணை நடத்திய நாடகம் உலகமே ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் ஆளுக்கொரு கதாப் பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம். யாரும் ஆட்டி வைக்கலாமேயே இயல்பாக நாடகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கு மட்டும்தான் நடிக்கத் தெரியுமா? ஏன் எங்களால் கூடாதா? நாங்களும் நடிப்போம்ல்ல... என்ற சொல்கிறார்கள் இந்த நடிகர்கள். யாரிந்த நடிகர்கள்? நடிகர்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஒரு சில வரிகள் . நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவரால் மட்டுமே தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்" என்பார் வள்ளுவர். நகைச்சுவை உணர்வு இல்லாதவர்க்கு இவ்வுலகம் பகலும் இரவுபோல்தான் ஒளியற்றதாக இருக்கும் .அதாவது அவர்கள் வாழ்க்கையில் ஒருநாளும் மகிழ்ச்சி இருக்காதாம். நகைச்சுவை உணர்வு இல்லாதது அவ்வளவு கொடுமையானதா? நகைச்சுவைக்கு நம் வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை உண்டு. காந்தியடிகள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அதனால்தான்" நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்குள் இல்லை என்றால் எப்பொழுதோ நான் என் வாழ்க்கையை இழந்திருப்பேன...