வல்லினம் மிகும் இடங்கள்
வல்லினம் மிகும் இடங்கள் வல்லின எழுத்துகள் க, ச ட. , த. ப. ற. வல்லின எழுத்துகள் இரண்டு சொற்கள் சேரும்போது வருமொழி முதலில் வல்லின எழுத்து வந்தால் எந்தெந்த இடங்களில் மிகும் எந்தெந்த இடங்களில் மிகாது என்பதைப்பற்றி பல்வேறு ஐயங்கள் ஏற்படுவதுண்டு. இந்த வல்லின எழுத்துகளில் ட , ற ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிமுதல் வராது. மீதமுள்ள க் ,ச் ,த் , ப் ஆகிய நான்கு வல்லின எழுத்துகளும் வருமொழி முதல் எழுத்தாக அமையும்போது எந்தெந்த இடங்களில் எல்லாம் ஒற்று மிகுந்து வரும் என்பதைப் பற்றி காண்போம். க. , ச , த ,ப என்ற எழுத்துகள் அப்படியேவும் வரலாம். அல்லது தமது வருக்க எழுத்துகளோடும் வரலாம். எடுத்துக்காட்டாக அந்த + பள்ளி = அந்தப் பள்ளி என எழுதுகிறோம். இதில் பள்ளி என்பது வருமொழி இதில் முதல் எழுத்து' ப. ' இந்த 'ப' என்பது ப் + அ = ப என உயிர்மெய் ஆகிறது. இப்போது 'ப் 'என்ற வல்லினம் கருத்தில் கொள்ளப்படும். ...