Posts

Showing posts from March, 2021

முட்டாள்கள் தினம்

Image
    முட்டாள்கள் தினம் ஏமாற்றுவதும் ஏமாறுவதும் மகிழ்ச்சியாக நடைபெறும் நாள்தான் ஏப்ரல் ஒன்று  முட்டாள்கள் தினம். அம்மாவுக்கான நாள் ஒன்று உண்டு. அப்பாவுக்கான நாளும் உண்டு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு நாளை உருவாக்கி வைத்த நாம் குழந்தைகளை மட்டும் விட்டு வைப்போமா என்ன ?  குழந்தைகள் நாள் என்று ஒன்றைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.  குழந்தைகளிலும் பெண் குழந்தைகளுக்கு  ஒரு நாள் என்று பிரித்துப் பார்த்துக்  கொண்டாடினோம்.  பெண் குழந்தைகளைக் கொண்டாடும் நாம்  மகளிரை மட்டும் விட்டு வைத்தால் எப்படி என  மகளிர் தினமும் கொண்டாடினோம். தந்தையர் தினம் கொண்டாடினோம்.    மனிதர்களோடு மட்டும் கொண்டாட்டங்களை  வைத்துக் கொண்டால் எப்படி ?   நீருக்கு ஒருநாள்.நிலத்துக்கு ஒரு நாள். காட்டுக்கு ஒருநாள். நாட்டு விலங்குக்கு ஒருநாள். சிட்டுக் குருவிக்கும்கூட ஒரு நாள் என்று நமது கொண்டாட்டங்கள் பலுகிக் கொண்டே போனது.  நினைத்தாலே சிரிப்புதாங்க வருகிறது.  அட...சிரிப்புக்கும் ஒரு நாள் கொண்டாடினோமே. இப்படி பகுத்துப் பார்த்துப் பார்த்து நாட்களைக...

படிக்கத் தவறிய பாடம்

    படிக்கத் தவறிய பாடம் ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு விதமான பாடத்தைக் கற்பித்துச் சென்று கொண்டிருக்கிறது. நல்லதோ கெட்டதோ நாளும் நம் கண்முன் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நல்லவைவற்றைக் காணும்போது கண்களை அகல விரித்து மகிழ்ச்சியை  வெளிப்படுத்துகிறோம். தீயவற்றைக் காணும்போது முகம் அப்படியே சுருங்கிப் போகிறது. சோர்ந்து போய்விடுகிறோம். அனைவரின் மனநிலையும் இப்படித்தான் இருக்கும். கும்மாளமும் குழப்பமும் இல்லாமல் யாரும் நாட்களை கடத்தி வந்திருக்க முடியாது. விடியலில் இருந்து நடந்தவற்றை மீள்பார்வை செய்து பார்ப்போமானால் இந்த உண்மை புரியும். இந்த நாள் நமக்கு நடத்திச் சென்ற பாடம் என்ன ? கடந்து வந்த நாட்களில் நாம் கற்றுக் கொண்டது என்ன ? பாடம் என்ன என்று தெரியும். பாடத்தின் மூலமாக சொல்லப்பட்ட கருத்து பல நேரங்களில் விளங்காது. விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற  ஆர்வமும் இருக்காது. மனப்பக்குவமும் போதாது. எல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள ஆசிரியரிடம் செல்லவும் முடியாது. நாமாக விளங்கிக் கொள்ள முயற்சி  மேற்கொள்ள வேண்டும். நடந்து முடிந்தவற்றை மீள்பார்வை செய்து பார்க்கும்போது பல உண்ம...

நோய்நாடி நோய்முதல் நாடி....

Image
    நோய்நாடி நோய்முதல் நாடி " நோய்நாடி நோய்முதல் நாடி  அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் "                         குறள் :  948 நோய் - பிணி நாடி  -  இன்னது என அறிந்து நோய்முதல் - நோய்க்கான முதற் காரணம் நாடி - ஆராய்ந்து அது - அந்த நோய் தணிக்கும் -  தீர்க்கும் வாய் - வழி நாடி - அறிந்து  வாய்ப்ப -  தவறாமல், பிழையில்லாமல் செயல் -  செய்க நோய் இன்னது என்பதை அறிந்து, அந்த நோய் வரக் காரணம் யாது என்பதை ஆராய்ந்து அதனைத் தணிக்கும் வழிகளைக் கண்டறிந்து பிழை நேர்ந்துவிடாது உடலுக்கு பொருந்தும்படி மருத்துவம் செய்க. விளக்கம் :  முதலாவதாக ஒருவனது உடலில் ஏற்பட்டுள்ள  நோய்க்கான அறிகுறிகளை வைத்து நோய் இன்னது என்பதைக் கண்டறிய வேண்டும். இரண்டாவதாக இந்த நோய் வருவதற்கான காரணம் என்ன ? என்னென்ன காரணிகள் இந்நோய் வருவதற்கு காரணமாக இருந்திருக்கும் என்பதைப் பற்றி விரிவாக  ஆராய்ந்து அறிய வேண்டும். மூன்றாவதாக மருத்துவத்தைத் தொடங்குவதற்கு முன்னர் ஒருவனுடைய உடலில் இந்த மருத்துவத்தை ...

ஹோலியும் ஹோலிகாவும்

Image
    ஹோலியும் ஹோலிகாவும் தீபாவளி என்றால் பட்டாசு .  பொங்கல் என்றால் கரும்பு.  கிறிஸ்துமஸ் என்றால் கேக்.  ஹோலி என்றால் வண்ணம்.  இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும்  ஒரு தனி அடையாளம் உண்டு.   பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தானாக வந்து குடி கொண்டுவிடும். ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியைத் தரும். எல்லா பண்டிகைகளும் ஏதோ ஒரு சிறப்பைப் பெறுவதாக இருக்கும்.  ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள சிறப்பு அது கொண்டாடப்பட்டதன் வரலாறு ஆகியவற்றை அறியும்போது எந்த ஒரு பண்டிகையும்  வெறுமனே பொழுது போகாமல் கொண்டாடப்பட்டதல்ல என்ற உண்மை புரிய வரும். புராண கதைகளாக இருக்கலாம் அல்லது வரலாற்று உண்மை நிகழ்வுகளாககூட இருக்கலாம். பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி ஒன்றையே  குறிக்கோளாக கொண்டிருக்கும். இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கியது. அப்பாடா...இனி எந்த அச்சமும் இல்லை. கொண்டாடுவோம் வாருங்கள் என்று  அழைப்பு விடுப்பதாகவே இருக்கும்.  வண்ணங்களின் பண்டிகையான ஹோலி கொண்டாடப்பட்ட  வரலாறு  சுவாரசியமானது. பால்குன் மாதத்தில் வரும் முழுநிலவு நாளில் ஹோலி க...

நிழல்நீரும் இன்னாத இன்னா....

Image
  நிழல்நீரும் இன்னாத இன்னா... " நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாஆம் இன்னா செயின்"                            குறள் : 881 நிழல் -  நிழல் நீர்  -       தண்ணீர் இன்னாத - தீங்கு செய்தால் இன்னா - தீயவையாம் தமர் - சுற்றத்தார், உறவினர் நீரும் - நீர்மை இயல்பும் இன்னாவாம் - தீயனவாம் இன்னா - துன்பம் செயின் - செய்தால் நிழலில் கிடக்கும் நீர் துன்பம் தரும்  தன்மை கொண்டதாக மாறினால் அதனை அருந்துவது தீங்கை விளைவிப்பதாகவே இருக்கும். அதுபோல உறவினர் உட்பகை கொண்டவராக இருந்தால் அவர்களால் துன்பமே வந்து சேரும். விளக்கம் : நிழலில் கிடக்கும் நீர் முதலில் குளிர்ச்சியாக  இருக்கும்.  அருந்தி ஆனந்திப்போம்.  பலநாள் அப்படியே நிழலில் கிடக்கும் நீரில் புழுக்கள் தோன்றி குடிப்பதற்கு லாயக்கற்ற நீராக மாறிவிடும். முதலில் இனிமை தந்த நீரல்லவா? அப்படி என்ன தீங்கு விளைவித்துவிடப் போகிறது என்று அருந்தினா...

பெண் ஒரு போராளி

Image
      பெண்  ஒரு போராளி பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள். பாதுகாக்கப்பட வேண்டியவள். பாராட்டப்படவேண்டியவள். சீராட்டப்பட வேண்டியவள். பெண் என்றால் தெய்வம். பெண் என்பவள் மகாலட்சுமி என்று எப்படி எப்படியெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் பெண் என்பவள் என்னவாக இருக்கிறாள்?  கள நிலவரம் என்ன ?  கவிபாட...கற்பனைத் தேர் ஓட்ட பெண்ணை மிகைப்படுத்திப் பேசிப் பேசி பெரும்பாலான பெண்களைப் பேச விடாதபடி பேசா மடந்தைகளாக முடக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். ஒவ்வொரு நாளும் அவளுடைய வாழ்க்கை ஒரு போராட்டமாகவே கழிந்து கொண்டிருக்கிறது. இதுதான் எதார்த்தம். இதை பெண்கள் யாரும் மறுத்துவிட முடியாது. ஆண்களும் எல்லாச் சுதந்திரமும்  கொடுத்திருக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்ளவும் முடியாது. காலையில் எழும்பியது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும்வரை  ஒருபெண் கடந்துவர வேண்டிய போராட்டக் களங்கள் எத்தனை ?எத்தனை ? பிறந்து உலகத்திதைப் பார்த்த மறுநொடியே போராட்டக்காரர்கள் கூச்சலிட்டுக்  கொடிபிடித்து  முன் வந்து நிற்கிறனர். கள்ளிப்பால் ஊற்றிக் கதையை முடித்த...

நிறைகுடம் நீர் தளும்பல் இல்

        நிறைகுடம் நீர் தளும்பல் இல் பழமொழிகள் படித்தவர்க்கும் பாமரர்க்கும் வழிகாட்டவல்ல சான்றோர் பெருமக்களின் அனுபவமொழிகள். உலகம் எப்படிப்பட்டது என்ற உண்மையை நம் முன் வைத்து கவனமாக நடை பயிலுங்கள் என்று அறிவுரை தந்து நிற்பவை. ஒவ்வொரு பழமொழியும் ஒரு அருமையான வாழ்வியல் உண்மையைச் சொல்லித் தந்து கடந்து போகும். " பழமொழியில் உமி கிடையாது " என்பார்கள் . அதாவது எந்தப் பழமொழியும்  பயனற்ற வெற்றுச் சொற்களால் புனையப்பட்டது அல்ல. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவாகவே என்பார் தொல்காப்பியர். அது நூறு விழுக்காடு உண்மை என்பதை உரக்கச் சொல்லிச் செல்வது பழமொழிகள். " நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப " என்று முதுமொழிக்கும் தனி இலக்கணம் சொல்லித் தருகிறது தொல்காப்பியம். முதுமொழி கூர்மையும் நுட்பமான உலக நடைமுறை உண்மையும் கொண்டதாக  இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பு முதுமொழிக்கு உண்டு. குறித்த பொருள் ஒன்றனையே  வரையறுத்து உரைக்கும் தன்மை  முதுமொழியின்  சிறப்பு...

ஈதல் இசைபட வாழ்தல்....

    ஈதல் இசைபட வாழ்தல்.... " ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு "                          குறள் :     231 ஈதல்  _  கொடுத்தல் இசைபட _ புகழ் உண்டாகும்படியாக வாழ்தல் _ வாழ்க்கை நடத்துதல் அது _ அப்படி அல்லது _ அல்லாமல் ஊதியம் _ வருவாய், பயன் இல்லை _ இல்லாததாகும் உயிர்க்கு _ உயிருக்கு வறியர்க்குக்  கொடுத்துப் புகழ் உண்டாகும்படி வாழ்தல் வேண்டும்.அப்புகழைத் தவிர உயிர்க்கு ஊதியம் வேறொன்றுமில்லை. விளக்கம் : ஒருவருக்கு புகழ் என்பது கல்வியால் வரலாம். வீரத்தால் பெற்றிடலாம். செல்வத்தால் புகழை அடையலாம். பதவியால் வந்திடலாம். ஆனால் இவை எல்லாவற்றையும்விட ஈகையால் வரும் புகழ் மட்டுமே சிறந்ததாக கருதப்படும். பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பர். அந்த பத்தும் பறந்துபோன நிலையில் நின்று...காதுகள் அடைத்து பசியால் வாடும் ஒருவனுக்கு உணவளித்துப் பசியாற்றும் பண்பு வர வேண்டும். பிறர்க்கு ஈந்து வாழ்தலால...

காக்கை கரவா கரைந்துண்ணும்....

  காக்கை கரவா கரைந்துண்ணும்.... "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள "                       குறள்   : 527 காக்கை - காகம் கரவா - மறைக்காது  கரைந்து - கூவி அழைத்து உண்ணும் - தின்னும் ஆக்கமும் - உயர்வும் , பெருக்கமும் அன்ன - அதுபோன்ற நீரார்க்கே - தன்மையுடையவர்க்கே உள - உண்டாகும், இருக்கும். காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி அழைத்து  உடனிருந்தே உண்ணும். அத்தகைய பண்பு கொண்டவர்களோடு மட்டுமே  சுற்றம் கூடி இருக்கும். விளக்கம் : தனக்கு வளமான வாழ்க்கை வாய்த்தபோது சுற்றத்தை மறந்துவிடக் கூடாது. அவர்களையும் அழைத்து அவர்களுக்கும் கொடுத்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். இன்சொல் பேசி நம்மோடு எப்போதும் ஒரு இணக்கமாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட வேண்டும். தம்மிடம்  செல்வம் வந்து சேரும்போது உறவுகளோடு பகிர்ந்து உண்ணும் பண்பு வர வேண்டும். அன்னநீர்மை கொண்டவர்  என்பவர் யார் ?  ஒரு பருக்கை கிடைத்தாலும்  கா.. கா...என்று தன் உறவுகளை அழைத்து கூடி இருந்து உண்ணும் காக்கையைப்...

வியாபாரம்

         வியாபாரம் தலைவாசலுக்கும் அடுப்பங்கறைக்குமாக நடந்து கொண்டிருந்தார் அம்மா. மனசு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. முகம் குப்பென்று வியர்த்து வடிந்ததால்.... ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார் பங்கஜத்தம்மா. தன்னைப் பெண் பார்க்க வந்தபோதுகூட இந்தப் பதற்றம் இல்லை.... ஏனோ தெரியவில்லை இன்று கூடுதலான ஒரு பதற்றம். வயசுக்கு வந்த மூணு பிள்ளைகளை வைத்திருக்கும் அம்மாக்களுக்கே அந்த வலியும் பதைபதைப்பும் இருக்கத்தான் செய்யும். மூத்தவளுக்கு முடிந்தால்தான் அடுத்த பிள்ளைகளுக்குப் பார்க்க முடியும். ஆனால் மூத்தவள் கொஞ்சம் மாநிறமாக இருந்ததால் வருகிற வரன் எல்லாம் தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. மனதிற்குள் இந்த வரனாவது அமைய வேண்டுமே என்ற பரிதவிப்பு முகத்தில் அப்பிக் கிடந்தது. ஒரு மாதிரி ஒரு படபடப்பாகவே இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட மறந்தவராக ஒன்று கடக்க ஒன்றை செய்து கொண்டிருந்தார். இருக்காதா பின்னே...இதுவரை பத்துக்கும் மேல்  மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். போய் த...

நேர்மறை எண்ணத்தை வளர்ப்போம்

Image
  நேர்மறை எண்ணத்தை வளர்ப்போம் "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"என்பார் சுவாமி விவேகானந்தர். நாம் பேசும் பேச்சு செயல் யாவும் நேர்மறையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நடப்பவையும் நன்றாகவே நடக்கும்.      *       சூழ்நிலை      சூழ்நிலை சரியாகவே இல்லை . நாம் அன்றாடம் காண்பவை யாவும் ஏறுக்குமாறாக ...தாறுமாறான நிகழ்வுகளாகவே இருக்கின்றன. கேட்பவை யாவும் சகிக்க முடியவில்லை. தரக்குறைவான சொற்கள். நம்மைச்சுற்றி நடப்பவை யாவும் விரும்பத் தகாததாகவும் தவறானதாகவுமே இருக்கிறது. இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் வாழ்கிற நம்மால் மட்டும் எப்படி நல்லவராக  இருக்கமுடியும்?" இந்தக் கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். இவற்றை எல்லாம் கடந்து நம்மை நாமாக நிலைநிறுத்திக்  கொள்வதுதானே சிறப்பு.      *     தாழ்வு மனப்பான்மை வேண்டாம் தாழ்வு மனப்பான்மையா... இது மட்டும் வேண்டவே வேண்டாங்க... அந்தத் தாழ்வு மனப்பான்மை என்னும் வில...

அவ்வித்து அழுக்காறு உடையானைச்....

    அவ்வித்து அழுக்காறு உடையானைச்..... " அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் "                         குறள் : 167 அவ்வித்து -சூழ்ச்சியால் அழுக்காறு - பொறாமை உடையானை - கொண்டவனை செய்யவள் - திருமகள் தவ்வையை - தமக்கை ( திருமகளின் அக்கா மூதேவி ) காட்டி - காண்பித்து விடும் _ நீங்கி விடும் பொறாமை குணம் கொண்டவர்மீது திருமகள் வெறுப்பு கொண்டு தன் தமக்கையாகிய  மூதேவியிடம் விட்டுவிட்டு தான்  அவ்விடத்தைவிட்டு நீங்கிவிடுவாள். விளக்கம் :  பிறர்மீது பொறாமை கொள்பவர்களிடம் திருமகள் எனப்படும் செல்வம் நிற்பதில்லை. பொறாமை குணத்தைப் பொறுத்துக் கொள்ள  முடியாதவளாக திருமகள் பொறாமை  குடி கொண்டிருக்கும் வீட்டிலிருந்து  வெளியேறி விடுவாள்.  அதாவது பொறாமை கொள்பவரின் வீட்டில் செல்வம் தங்காது. செல்வம் நீங்கிவிடுமானால் அவளுடைய தமக்கை எனக்கூடிய மூதேவி வந்து குடி புகுந்து கொள்வாள். அதாவது வறுமை  வந்துவிடும். பொறாமை என்னும் தீய குணம் வறுமைக்கு வழிவகுத்துவிடும். ஆதலால் பொறாமை கொள்ளாதீர் ...

நாயைக் கண்டால் கல்லை காணோம்...

Image
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.... நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" இது வேடிக்கையாக சொல்லப்படும் பழமொழி. சிலருக்கு எப்போதும் நாயைக் கண்டால் போதும். கை தானாக கல்லை எடுத்துவிடும். நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு பாதுகாப்பிற்காக கையில் கல்லைத் தூக்கிவிடுவர். இன்னும் சிலரோ நாய்மீது கல்லெரிந்துவிட்டு நாய் காலைக் காலை உயர்த்தி  நொண்டிக் கொண்டே  ஓடுவதைப் பார்த்து இன்புற வேண்டும் என்று ஒரு அற்ப ஆசை. இப்படி கல்லுக்கும் நாய்க்கும் தொடர்பு இருக்கோ இல்லையோ நமக்கும் கல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் பழமொழி என்பது வெறுமனே சிரித்து மகிழ மட்டுமே கூறப்பட்ட ஒன்றாக இருக்கமுடியாது. அதனால் இந்தப் பழமொழிக்கு உள்ளார்ந்த  இன்னொரு பொருள் கண்டிப்பாக  இருந்திருக்க வேண்டும். அது கால ஓட்டத்தில் காணாமல் போயிருக்கலாம். அல்லது நாம்தான் அதன் உண்மையான பொருளைத் தேடாமல் விட்டிருக்கலாம். இப்போது அதன் உண்மையான பொருள் என்னவாக இருந்திருக்கும் என்பதைப் தேடித்தான் பார்ப்போமே! ஒரு பெரிய மனிதர் தன் தோட்டத்துக் காவலுக்காக...

நட்டார்போல் நல்லவை சொல்லினும்...

  நட்டார்போல் நல்லவை சொல்லினும்.... " நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் "                         குறள்  : 826 நட்டார் - நண்பர் போல் - போன்று நல்லவை - நன்மை பயப்பவை சொல்லினும் - சொல்வாராயினும் ஒட்டார் - மனதளவில் ஒட்டாதவர் சொல் -  பேச்சு ஒல்லை - விரைவில் உணரப்படும் - வெளிப்பட்டுவிடும் நம்மிடம் பேசும்போது நண்பரைப்போல நன்றாகப் பேசினாலும் உள்ளத்தால் ஒட்டாதவரின்  வஞ்சகப் பேச்சு  விரைவிலேயே  வெளிப்பட்டுவிடும். விளக்கம் : சிலருடைய பேச்சு கேட்பதற்கு இனிமையாக  இருக்கும். நம்மேல் கரிசனம் இருப்பதுபோல்  தோன்றும்.இது எல்லாம் போலியாக இருப்பதால்  மனதளவில் ஒரு நெருக்கம் இருக்காது.  இவர்களுடைய  இந்தப் போலியான கரிசனமும்  அன்பும் நமக்கு ஒரு இடர் வரும்போது  காணாமல் போய்விடும்.  நமக்கு ஒரு தேவை ஏற்படும் காலத்தில்  அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து  அவர்களுடைய உண்மையான  முகத்தை நாம் கண்டு கொள்ளலாம்.  கெட்டிக்காரன் புளுகு எட்டு ...