நில்லாய் நெடுஞ்சுவரே
நில்லாய் நெடுஞ்சுவரே "ஒரு சொல் வெல்லும்; ஒருசொல் கொல்லும் "என்று சொல்வார்கள். சொல்லுக்கு அவ்வளவு பெரிய ஆற்றல் உண்டு. அதுவும் புலவர்களின் சொல்லுக்குப் பேராற்றல் உண்டு. அதனால்தான் காளமேகம் மண்மாரிப் பொழியட்டும் என்றதும் மண்மாரிப் பொழிந்ததாகப் படித்திருக்கிறோம். புலவர்கள் அறம்பாடி அழித்த வரலாறுகளும் உண்டு. இங்கு ஒருவர் தன் சொல்லால் நெடுஞ்சுவரேயே நிற்க வைத்து விட்டாராம். யாரப்பா அந்தப் பேராற்றலுக்குக்குரிய பெரும்புலவர் என்று அறிய ஆவலாக உள்ளதல்லவா? சோழ மன்னன்னோடு ஏற்பட்ட மாறுபாட்டால் மன்னனும் நீயோ வளநாடு முன்னதோ உன்னை நினைத்தோ தமிழை யோதினேன் என்று கோபமாகப் பேசிவிட்டு சோழ நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் கம்பர். ஏதோ கோபத்தில் வெளியே வந்துவிட்டார். வந்த பின்னர்தான் எங்கே செல்வது? யாரிடம் போய் நிற்பது? என்று கம்பருக்கு ஒன்றும் புரியவில்லை. கால் போன போக்கில் நடக்கிறார். எவ்வளவு தூரம் நடப்பது? இப்போது வயிறு மெதுவாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தது. வயிற்றுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அதற்கு கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன? அதற்காக யாரிடமாவது இரந்து பொரு...