Posts

Showing posts from April, 2024

கெடுக சிந்தை கடிதிவள் துணிவே....

கெடுக சிந்தை கடிதிவள் துணிவே.... பிள்ளை வெளியில் செல்கிறான். போகும்போது பார்த்து பத்திரமாக வா என்று சொல்லி அனுப்பும் தாய்மாரைப் பார்த்திருக்கிறோம். வரும்வரை வாசலிலேயே நின்று அலை மோதும் மனைவியைப் பார்த்து  "அவன் என்ன சின்ன புள்ளையா? வருவான் ... வருவான்  வந்து எனக்குச் சாப்பாடு போடு "என்பார் கணவர். எதுவும் காதில் விழாது. தூரத்தில் மகனைப் பார்த்ததும் தான் ஒரு நிம்மதி பெருமூச்சு வரும். இப்படிப் பார்த்துப் பார்த்து  பிள்ளைகளை வளர்க்கும் காலம். கேட்டால் ஒற்றைப் பிள்ளையை வைத்திருக்கிறேன். கருவேப்பிலைக் கண்ணாக வளர்க்கிறேன் என்று  நாம் மட்டும் தான் ஒற்றைப் பிள்ளையை வைத்திருப்பது போல ஏதோ நமக்குச் சரியெனப் பட்டதைப் பேசுவோம். அப்படி என்றால் முன்பு எல்லாம் இப்படி இல்லையா? வெளியில் சென்ற பிள்ளையை வந்தால் வா... வராவிட்டால் போ என்று அப்படியே விட்டுவிடுவார்களா? அதெப்படி? பெற்ற பிள்ளை மீது அன்பு இருக்காதா என்ன? அப்படியானால்... அப்படியானால்...ஏன் இவள் இப்படிச் செய்தாள்? யாரவள்...யாரவள்? கெடுக சிந்தை கடிதிவள் துணிவே  என்று புலவர் ஒருவர்  கோபப்படும் அளவுக்கு அப்படி என்ன செய்துவ...

திருமண வாழ்த்து

Image
திருமண வாழ்த்து  நன்றென இறைவன்  நினைத்திருக்க நல்லருள் மணமகன் கரம் பிடிக்க சிறு புள்ளாய் மனம் சிறகடிக்க தேவதையாய் மணமகள் உடன் நடக்க ஆல்போல் வாழ்வு தழைத்திருக்க அருகுபோல் பரம்பரை நிலைத்திருக்க மூங்கில் போல் சுற்றம் தழுவி நிற்க இல்லறம் இன்பம் இனித்திருக்க  வாழ்வீர் என்றும் இணையாக! வாழ்த்துகிறோம் உறவுகள் மகிழ்வாக வாழ்க பல்லாண்டு நலமாக!           - செல்வபாய் ஜெயராஜ் 

ஆவாரை யாரே அழிப்பார்

ஆவாரை யாரே அழிப்பார்  ஒருவருடைய வாழ்க்கை வசதி வாய்ப்போடு நன்றாக இருக்கிறது. அதற்குக் காரணம் முன்னோர் சேர்ந்து வைத்த பொருளாக இருக்கலாம். புண்ணியமாக இருக்கலாம். உழைப்பாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணம் ஒருவரின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்திருக்கிறது. வளர வேண்டும் என்று இருந்தால் அந்த வளர்ச்சிக்குத் தடையிட எவராலும் கூடாது. அதைத்தான் ஔவை ஆவாரை யாரே அழிப்பார்  என்கிறார். அடுத்த வரியிலேயே சாவாரை யாரே தவிர்ப்பவர் என்ற கேள்வியை முன் வைக்கிறார். உண்மை. சாவைத் தவிர்த்தவர் எவரும் உண்டோ? சாவு வந்தால்... நாளை வருகிறேன். நாளை மறுநாள் வருகிறேன். இல்லை என் பிள்ளைக்குத் திருமணம்  முடித்து வைத்துவிட்டு வருகிறேன் என்றால் நிற்குமா? ஒரு நாள் கழித்து வா தம்பி என்று சொல்லிவிட்டுப் போகுமா?  இந்தக் கேள்வி நமக்குள்ளும் எழுகிறதல்லவா? தவிர்க்க முடியாதது தள்ளிப் போட முடியாதது வாய்தா வாங்க முடியாதது மரணம். மூன்றாவதாக ஒருவர் வறியவர் ஆகி பிறரிடம் பிச்சை  எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதனைத் தடுக்க நம்மால் கூடுமோ? ஒரு நாள் உதவலாம். இரண்டு நாள் உதவலாம். காலத்திற்கும் உதவிக் கொண்டிருக்க முடிய...

அடுதலும் தொலைதலும் புதுவது அன்று

Image
அடுதலும் தொலைதலும் புதுவது அன்று  வாழ்க்கையில் எதிரிகளே இல்லை என்று யாராலும் கூற முடியுமா? என்னால் முடியும். எனக்கு எதிரியே இல்லை. நான் யாரையும் என் எதிரியாகப் பார்ப்பதில்லை. நான் எதிரியாகப் பார்த்தால்தானே அவர்களும் என்னை எதிரியாகப் பார்ப்பார்கள். அதனால் எனக்கு எதிரிகளே இல்லை என்று அடித்துச் சொல்வேன் . இப்படி ஒரு சிலரின் மனவோட்டம் இருக்கும். அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் ஓர் ஏமாளி.ஏன் அப்பாவி உலகம் தெரியாதவர்  என்றே சொல்வேன். அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்கு முன்னாலேயே எதிரிகள் இருந்திருப்பதைக் காலமும் சூழ்நிலையும் காட்டிக்கொடுத்த பின்னர் தான் உலகம் புரிந்தது. அப்போது...இவர்களா? இவர்களா நமக்கு எதிராக இப்படி  நடித்திருக்கிறார்கள். இவ்வளவு நாளும் இது தெரியாமல் நன்றாகப் பழகியிருக்கிறோமே  எதிரி எதிரிலேயே இருப்பது அறியாது இருந்திருக்கிறோமே என்பது புரிந்தது. நன்றாகப் பேசுவதால் நம்மைப்போல் தான் அவர்களும் உண்மையாகப் பழகுகிறார்கள் பேசுகிறார்கள் என்று நினைக்கிறோம். காலம் வரும் போது எல்லா நேரமும் அவர்களுக்கு இயைந்து நடக்க முடியாதபோ...

சங்கத்தமிழ் மூன்றும் தா

Image
சங்கத்தமிழ் மூன்றும் தா  எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் இறைவனைத் தொழுவது நமது வழக்கம். இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே நாம் செய்யப் போகும் காரியம் வாய்க்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குள்ளும் இருக்கும். ஔவை மட்டும் இதற்கு விதிவிலக்காக என்ன? நாம்,நம் தொழில் நன்றாக நடக்க வேண்டும். படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். நோய்நொடி இல்லாத நலமான வாழ்வைத் தர வேண்டும் என்று இறைவனிடம் கேட்போம். நல்ல அறிவைக் கொடு என்று கேட்போம். கீர்த்தியும் புகழும் வந்து சேரட்டும் என்று கேட்போம். ஔவையும் தனது நல்வழி பாடல்களை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக  இறைவனை வணங்கினார்.  வணங்குவதோடு மட்டுமல்லாமல் இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார். அப்படி என்ன தேவை  ஔவைக்கு இருந்தது.? வயிறார உண்ண நல்ல  உணவு வேண்டும் என்று கேட்டாரா? எழுதி முடிக்கும் வரை போதிய உடல் நலம் வேண்டும் என்று  கேட்டாரா? வேறென்ன கேட்டிருப்பார்? நீங்கள் நினைப்பதுபோல் இப்படியொரு வேண்டுதலை ஔவை முன் வைக்கவில்லை. அவர் வைத்த கோரிக்கை  என்ன தெரியுமா? இதோ கேளுங்கள்... எனக...

உன்னோடு வாழ்தல் அரிது

உன்னோடு வாழ்தல் அரிது  அரியது எது என்ற கேள்விக்கு, அரியது கேட்கின் வரி வடிவேலோய் அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது பேடு நீங்கி பிறந்த காலையும்  ஞானமும் கல்வி நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்தகாலையும்  தானமும் தவமும் தான் செயல் அரிது தானமும் தவமும் தான் செய்வ ராயின் வானவர் நாடு வழி திறந்திடுமே!" என்றார் ஔவை. அருமையானப் பாடல். பாடலைக் கேட்டதும் எந்தவித உடற்குறையும் இல்லாமல் வாழ்தல்  அரிதினும் அரிது என்று மனதில் எழுதி வைத்துக் கொண்டோம். நமக்கு அப்படி ஒரு குறையில்லா உடலைத் தந்தமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். அப்படிச் சொல்லித் தந்த ஔவை கூடவே ஞானம், கல்வி நயந்து பெற்றிருந்தாலும்  தானம் தவம் செய்தல் அரிது என்று அரிதானவற்றை வரிசைப்படுத்திச் சொல்லித் தந்தார். அருமையாக விளக்கமாக ஒன்றோடு ஒன்றை ஒப்புமைப்படுத்தி  எல்லாமே அரிதானவைதான் என்று நம்மை ஒத்துக்கொள்ள வைத்தப் பாடலைத் தந்து நம்மையும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க  வைத்தார் ஔவை. இப்போது அரிது எது என்று ஒரு முடிவான கருத்துக்கு வந்துவிட்ட...

முதல் வரிசை

முதல் வரிசை  ஆதித்தன் ஆட்சி செய்ய வந்து இரண்டுமணி நேரம் ஆகியும் வீட்டில் எந்த அரவமும் இல்லை.        மூலையில் முடங்கி கிடந்த மான்சி ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை கண்ணைத் திறந்து அம்மாவைப் பார்த்தாள்.        அம்மா இப்போதைக்கு எழும்புவதாகத் தெரியவில்லை.        மெதுவாக 'அம்மா 'என்று கூப்பிட்டுப் பார்த்தாள்.        அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.        அக்காவின் சத்தத்தைக் கேட்டதும் அம்மாவின் அருகில் படுத்திருந்த தம்பி  மெதுவாக திரும்பி அம்மாவைப் பார்த்தான்.               "அம்மா...அம்மா.".மெதுவாக உலுக்கினான்.      '  படு....'மெதுவாக தட்டிக் கொடுத்தார் அம்மா.        "அம்மா..விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிட்டு"        "பேசாம    தூங்கு...அப்பா...

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

Image
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்  "பசி ருசி அறியாது "என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.       "பசித்தபின் புசி "என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.      இது என்ன பசி வந்தால் பத்தும் பறந்து போகும்?       அது என்ன பத்து ? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா!       கொஞ்சம் பொறுங்கள். பசியாறிவிட்டு வருகிறேன்.       அதாவது ஔவையின் பாடலைப் படித்து அறிவுப் பசி ஆற்றிவிட்டு வருகிறேன் என்று சொன்னேன். அப்பாடா... என்ன இது? நானொன்று நினைக்க இந்த ஔவை வேறொன்று சொல்கிறாரே! நான் என்ன நினைத்தேன் என்றால்  பசி வந்தால் சட்டி பத்த இருக்கும் பருக்கையையும் வழித்து உருட்டி உள்ளே உள்ளே தள்ளி விடுவோம் இல்லையா? அதைத்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஔவை என்னடா வென்றால் வேறு ஒரு பதிலைச் சொல்கிறார்.       பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்கான பதிலை ஔவையிடமிருந்து வாங்கி வந...

அம்மா பிள்ளை

அம்மா பிள்ளை  நான் கேட்டுகிட்டே இருக்கிறேன். நீ பதிலே சொல்ல மாட்டேங்குற..." உரக்கக் கத்தினார் அம்மா. திரும்பிப் பார்த்துச் சிரித்தான்  பார்த்திபன். இந்த அம்மாவே இப்படித்தான். திடீரென்று இப்படித்தான்  உரக்கக் கத்துவாங்க. அம்மாவை எப்படி ஆப் பண்ண வேண்டும் என்று பார்த்திபனுக்குத் தெரியும். அதனால்தான் இந்த நமட்டுச் சிரிப்பு. "இது என்ன சிரிப்பு....? நான் கேட்பது உனக்குச் சிரிப்பா இருக்கு இல்ல..." கோபமாகக் கேட்டார் அம்மா. வாயைப் பொத்திக்கொண்டு  சிரித்தபடி திரும்பி நின்று கொண்டான் பார்த்திபன். "திரும்பி நின்னுகிட்டா..... கேட்கமாட்டேனா? இப்போ நீ என்னதான் சொல்லப் போற?" தோளைப் பிடித்து உலுக்கித் திருப்பியபடி கேட்டார் அம்மா. "உனக்கு இப்போ என்ன வேணுங்குற...?" "ஒரு பத்து பவுனு நகை வேணுங்கிறேன்." "அட ....எங்க அம்மாவுக்குக்கூட ஜோக் அடிக்க தெரியுது பாருங்க" "உன்னை அடிக்காம வளர்த்துட்டேன் பாரு. நீ இதுவும் சொல்லுவா இதுக்கு மேலேயும் சொல்லுவா." "வாங்க...வாங்க அடியுங்க... நல்ல அடியுங்க.. உங்க கை வலிக்கும் வரை அடியுங்க..." "பேச்ச...

போது, பொழுது சரியாக எழுதுவது எப்படி

போதும் பொழுதும்  சில சொற்களை எழுதும்போது நாம் சரியான சொல்லைத் தான் கையாளுகிறமா என்ற ஐயப்பாடு எழுதல் இயல்பு. அதற்குக் காரணம் ஒரே பொருளில் இருவேறு சொற்களைக் கையாள்வதால்  ஏற்படும் குழப்பமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக  'போது 'பொழுது'ஆகிய இரண்டு சொற்களையும் பயன்படுத்தும்போது சில நேரங்களில் குழப்பம்  ஏற்படுவது உண்டு போது என்று எழுத வைண்டுமா? பொழுது என்று எழுத வேண்டுமா? எது சரி? எது தவறு? இப்படிச் சர்ச்சைகள் மனதிற்குள்  எழுந்த நாட்கள் உண்டு.   பொழுதின் சுருங்கிய வடிவம்தான் போது என்று வாதிடுவர் ஒரு சிலர். ஆனால் போதிய சான்றுகள் தரப்படாததால் இன்றுவரை நாம் எழுதும்போது குழப்பத்திலேயே ஏதாவது ஒன்றை  எழுதி வைத்திருப்போம். பாடநூல் எழுதும்போது எங்களுக்குள் இது விவாதப் பொருளானது. அப்போது விவாதிக்கப்பட்ட கருத்து உங்களுக்காக... போது என்றால் மலரும் பருவத்தில் இருக்கும் மலர். போது என்பதன் பொருள் செவ்வி காலம் தக்கசமயம் வாழ்நாள் பொழுது என்று பல பொருளில் கையாளப்பட்டு வருதலைக் காணலாம். போது என்பது பெயர்ச்சொல்லாக வரும்போது மலர் என்ற பொருளில் வருகிறது. இங்கே வரும்போது என்ற சொல்...

பிரளயம் பற்றிய கதைகள்

Image
பிரளயம் பற்றிய கதைகள்  வழக்கத்திற்கு மாறான பெருவெள்ளம்.  பார்க்கும் இடமெங்கும் வெள்ளக்காடு.  மழை ஓவென்று ஒப்பாரி வைத்து  தன் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை.  சிறுகுளங்கள் எல்லாம் உடைப்பெடுத்து  ஊருக்குள் தண்ணீர் வந்துவிடுகிறது.   அவ்வளவுதான் ஊர் முழுவதும் கூச்சலும்   கூப்பாடுமாக மாறிவிடுகிறது.  என்ன செய்வதெனத் தெரியாத பதற்றம்.  ஐயோ...ஜலப் பிரளயம் வந்து   உலகம் அழியப் போகிறது போலிருக்கிறதே  என்று ஆளாளுக்குப் புலம்பத்  தொடங்கிவிடுகின்றனர்.    இப்படிப்பட்டதான சூழ்நிலை பல நேரங்களில்  நிகழ்ந்ததுண்டு.  இப்போதே ஊர் அழிந்து போகக் கூடுமோ   என அஞ்சி இருப்போம்.  எல்லாம் நான்கு நாட்கள்தான்.  அதன்பிறகு பிரளயம் வந்ததற்கான  சுவடே இல்லாமல் போய்விடும். "பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள " என்ற சிலப்பதிகார அடிகள் பிரளயத்தால் குமரிக் கண்டம் காணாமல் போனதைப் பற்றி குறிப்பிடுகிறது. பிரளயம் என்றால் என்ன? என்பது இப்போது புரிந்திருக்கும். இயற்கைப்...

பயனில்லாதவை

பயனில்லாதவை ஏழு ஒரு பொருள் தேவையானதா? தேவை இல்லாததா? பயனளிக்கக்கக் கூடியதா? பயனிளிக்காததா? இதனை நிர்ணயிப்பது எது? காலம்...சூழ்நிலை...அந்த மனிதன் இருக்கும்நிலை இவைதான்  அதனைத் தீர்மானிக்கும். ஒருவருக்குத் தேவையான ஒரு பொருள் இன்னொருவருக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஒருவருக்குப் பயன்படுவது இன்னொருவருக்குப் பயன்படாமல் போகலாம். அதனால் சில கருத்துக்கள் மாற்றி  மாற்றி பேசப்படும். ஆளுக்கு ஆள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதுண்டு. ஆனால் சில கருத்துகள் எப்படித்தான் மாற்றி மாற்றிப் பேசினாலும் மாற்ற முடியாதபடி எல்லாக் காலத்திற்கும் எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ள தக்கதாக இருக்கும். அதுதான் காலத்தால் அழியாத, அழிக்க முடியாத கருத்தாக நம்மோடு நடை பயின்று கொண்டிருக்கும். அந்தவகையில் காலத்தால் அழிக்க முடியாத அருமையான கருத்துக்களைக்  கொண்ட ஒரு நூல்  விவேக சிந்தாமணி. அனுபவ மூதுரைகள் அடங்கிய அறிவுக் கருவூலம் விவேக சிந்தாமணி என்றுதான் சொல்ல வேண்டும். இது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. சிந்தனைக்கு உகந்த கருத்துக் குவியல் என்பது மட்டும் உண்மை. நீதிக்...

சிலேடை வகைகள்

சிலேடை   வகைகள்  விவசாயி ஒருவர் தன் தோட்டத்து வாயிலருகே வந்து கொண்டிருக்கிறார். அங்கே தன் பருத்தி வயலில் ஆடு ஒன்று மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தும் பதறிப் போய்விட்டார். அங்கே நின்று கொண்டிருந்த தொழிலாளியிடம் "ஆடுறா....ஆடுறா "என்று கத்தினார். தொழிலாளிக்கு தன் முதலாளி ஏன் இப்படி கத்துகிறார் என்பதைச் சட்டென்று புரிந்துகொள்ள முடியவில்லை. தண்ணீர் பாய்த்துக்கொண்டு நிற்பவனிடம் ஆடச் சொன்னால்..... கையில் இருந்த மண்வெட்டியை அப்படியே வீசிவிட்டு ஆடத்தொடங்கினான். "அடே முட்டாள்...ஆடுறா..ஆடுறா..." திரும்பவும் கத்தினார். "நான் நன்றாக ஆடவில்லையா? மறுபடியும் கத்துகிறாரே "என்று நினைத்துக் கொண்டு மேலும் உற்சாகமாக ஆடினான். அதற்குள் முதலாளி அருகில் வந்து "வயலில் ஆடு மேயுதுடா என்றால்... நீ ஆட்டம் போடுறியாக்கும் "என்று கடிந்து கொண்டார் . ஒடிச்சென்று  ஆட்டைத் துரத்தி விட்டுவிட்டு வந்த தொழிலாளி "என்ன முதலாளி...நீங்க முதலாவதே சரியா சொல்லியிருக்கலாமில்லையா.... இப்போ பாருங்க ஒரு பாத்தி பருத்திச்செடியை வெள்ளாடு மொட்டையாக கடிச்சி தின்னுப்புட்டுது" என்றான் ஆதங்கத்த...

மேகத்தோடு ஓட்டம்

Image
மேகத்தோடு ஓட்டம்  வானத்தைப் பார்த்தபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது முயல்.    வானத்தில் ஓடும் குட்டிக்குட்டி மேகங்கள் தன்னைப் போன்றே இருப்பதைப் பார்த்து வியந்து போனது.   " எங்கே இந்த மேகங்கள் ஓடுகின்றன?     அப்பப்பா...என்ன வெண்மை...என்னைவிட வெண்மையாக இருக்குமோ ?"     தொட்டுப் பார்த்துவிட ஆசை. ஆனால் முடிகிற காரியமா என்ன?     எப்படி வானத்திற்குப் போக முடியும்.     ஏணி வைத்தால் கூட எட்டாதே.     இன்று எப்படியாவது தொட்டுப் பார்த்துவிட வேண்டும் .ஆசை ஆசையாக மேகத்தையே பார்த்தது.     எட்டி நின்று தன் குட்டிக் குறும்பால் சுண்டி இழுத்து என்னை தூங்க விடாமல் செய்கிறதே .     இந்த மேகங்களுக்குத்தான் எத்தனை குறும்பு.     அப்படியே ஏதேதோ சிந்தனையில் அசந்து தூங்கிப் போனது.     சற்று நேரத்தில் ஒரே தாவல்.... வானத்தைப் போய் சேர்ந்தது முயல்.     பக்கத்தில் மேகக் கூட்டம்.      "ஆ...இது எப்படி சாத்தியமாயிற்று?"     "யார் கொண்டு விட்டது?".ஆச்சரிய...