நல்ல நண்பன் யார்
நல்ல நண்பன் யார் நட்பைப் பற்றி பேசாதவர் எவருமிலர். நான்கு வயது ஆகும்போதே நண்பர்கள் வைத்துக் கொள்ளும் காலம் இது. பார்த்ததுமே நட்பு. மழலையர் பள்ளியில் தொடங்கும் நட்பு. ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது நட்பு. உயர்நிலைப் பள்ளி நட்பு. மேல்நிலைப் பள்ளி நட்பு. கல்லூரி நட்பு. அலுவலக நட்பு. அக்கம்பக்கத்து நட்பு என்று நட்பு காலத்திற்கு ஏற்ப சூழலுக்கு மாறிக் கொண்டே இருக்கும். தண்ணீர் இல்லாமலும் இருக்கலாம். நட்பில்லாமல் இருக்க முடியாது. காரணம் நமது உள்ளக்கிடக்கைகளை பரிமாறிக்கொள்ள துக்கங்களைச் சொல்லி மன ஆறுதல்பட மகிழ்ச்சியைக் கொண்டாடி மகிழ என்று எப்போதும் நமக்குத் துணை தேவையாக இருக்கிறது. அந்தத் துணையைத் தேடி மனம் ஆலாய்ப் பறக்கிறது. எந்தவொரு காரணமும் இல்லாமல் ஏதோ ஒரு நட்பு நம்மோடு தொடர்ந்து கூடவே வருவதைக் காணலாம். அதுதான் உண்மையான நட்பு என்று உள்ளம் சொல்லும். நம் உள்ளம் சொல்வது இருக்கட்டும். பெரியவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் கேட்போம் வாருங்கள். நட்பைப் பற்றி எத்தனையோ பாடல்களில் படித்திருக்கின்றோம். கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையார் நட்பு அதியமான் - ஔவையார் நட்பு கண்ண...