Posts

Showing posts with the label சுனைவாய்ச் சிறுநீரை....

சுனைவாய்ச் சிறுநீரை...

Image
சுனைவாய்ச் சிறுநீரை.......     சங்க இலக்கியப் பாடல்கள் காதலையும் வீரத்தையும் சொல்வதாகவே இருக்கும். காதல் காட்சிகளைச் சொல்வதாக இருந்தாலும் அதிலும் ஒரு அருமையான செய்தி புதைந்திருக்கும். இங்கே மாறன் பொறையனார் என்ற புலவர் காட்டில் நிகழும் ஒரு அருமையான காதல் காட்சியை நம் கண்முன் படம் பிடித்துக் காட்டுகிறார். தலைவன் ஒருவன் பிரிந்து சென்றுவிட்டான். அவன் சென்ற இடமோ நீரில்லாப் பாலைநிலம். அந்தப் பாலை நிலத்தையும் சொல்ல வேண்டும். அவன் பாலை வழியேசென்றான் ஆயினும் உன்மீது கொண்ட அன்பு குறையாதவன் என்றும் சொல்ல வேண்டும். அதற்குப் புலவர் கையாண்ட உத்தியைப் பாருங்கள். காட்டில் ஒரு பெண்மானும் ஆண்மானும் வாழ்கின்றன.இருவருக்கும் தாகம். தொலைவில் கிடக்கும் சுனையைத் தேடி செல்கின்றன. சுனையில் கிடக்கும் நீரோ ஒருத்தர் மட்டும் குடிப்பதற்குப் போதுமானதாக உள்ளது. ஆண்மான் குடிக்கவில்லை என்றால் பெண்மான் நீர் குடிக்காது. தான் மட்டும் குடித்துவிட்டால் பெண்மானுக்கு குடிப்பதற்கு நீர் இருக்காது. இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தது ஆண்மான். நீரில் வாய் வைத்து உறிஞ்...