சாதி இரண்டொழிய வேறில்லை
சாதி இரண்டொழிய வேறில்லை.... " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்றார் வள்ளுவர். பிறப்பால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டும் திறனுக்கு ஏற்ப வேறுபாடுகள் கண்டறிய முடியுமே தவிர பிறப்பால் வேறுபாடு இல்லை. பிறப்பில் வேறுபாடு இல்லை எனில் இடையில் எங்கிருந்து நுழைந்தது இந்தப் சாதியப் பாகுபாடு.? உயர்ந்தவர் தாழ்ந்தவர் மேலோர் கீழோர் என்ற பகுப்பு எதனால் ஏற்பட்டது.? பணத்தால் எழுந்திருக்கலாம். செய்யும் தொழிலில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அது எப்படி ஒரு குறிப்பிட்ட தொழில் செய்யும் பிரிவினர் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்குவதற்கு காரணமாக இருக்க முடியும்? தொழில் என்று பார்க்க வேண்டுமே தவிர இது உயர்ந்த வேலை இது தாழ்ந்த வேலை என்று சொல்ல முடியாது. ஒரு தொழிலில் தேர்ச்சி பெற்றவர் எல்லா தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார். அவரவர் தொழிலில் அவரவர் பெரிய ஆளாக இருப்பார். சாதாரண கொத்தனார் வேலைதானே என்று சொல்லுவோம். செய்து பாருங்களேன். அதிலுள்ள நுட்பம் தெரியாமல் விழிபிதுங்கிப் போவோம். சமைய...