Posts

Showing posts from June, 2022

இமையாரின் வாழினும் பாடிலரே.....

இமையாரரின் வாழினும் பாடிலரே.... "இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர் "              குறள் :.    906 இமையாரின் - தேவர்போல வாழினும்- வாழ்ந்தாலும் பாடு - பெருமை இலரே- இல்லாதவரே இல்லாள்- மனைவி அமையார்- அழகு பொருந்திய தோள்- தோளைக் கண்டு அஞ்சுபவர்- பயப்படுபவர் மனைவியின் தோளுக்குப் பின்னால்  அஞ்சி வாழ்கிறவர் இவ்வுலகில் தேவரைப்போல உயர்வான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர். விளக்கம் : மனைவிக்குப் பயந்து வாழ்பவர்களால் துணிந்து தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. எதற்கெடுத்தாலும்  என் மனைவியைக் கேட்டுப் சொல்கிறேன் என்று சொல்கிறவர் கோழையாகவே கருதப்படுவார். அவரால் அறச்செயல்களில் ஈடுபட முடியாது. குடும்பத்தாருக்கு ஒரு உதவி  செய்ய முடியாது.  அதனால் அவர் முதுகெலும்பில்லாதவராகவே கருதப்படுவார். மனைவி சொல்லே மந்திரம் என்று மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மனைவியின் முதுகுக்குப் பின்னால் வாழ்ந்தால் மனைவியை நன்றாக வைத்திருக்கிறார் என்று  உலகம்  நம்மை  பெருமையாக நினைக்கும்  என்று தப்புக்...

பொழுதும் போதும்

Image
பொழுதும் போதும் பொழுது,போது 'ஆகிய இரண்டு சொற்களையும் பயன்படுத்தும்போது சிலருக்கு குழப்பம்  ஏற்படுவது உண்டு போது என்று எழுத வைண்டுமா? பொழுது என்று எழுத வேண்டுமா? எது சரி? எது தவறு?  இப்படிச் சர்ச்சைகள் எழுதல் உண்டு.   பொழுதின் சுருங்கிய வடிவம்தான் போது என்று வாதிடுவர் ஒரு சிலர். ஆனால் போதிய சான்றுகள் தரப்படாததால் இன்றுவரை நாம் எழுதும்போது குழப்பத்திலேயே ஏதாவது ஒன்றை  எழுதி வைத்திருப்போம். பாடநூல் எழுதும்போது இது விவாதப் பொருளானது. அப்போது விவாதிக்கப்பட்ட கருத்து உங்களுக்காக... போது என்றால் மலரும் பருவத்தில் இருக்கும் மலர். போது என்பதன் பொருள் செவ்வி காலம் தக்கசமயம் வாழ்நாள் பொழுது போது என்பது பெயர்ச்சொல்லாக வரும்போது மலர் என்ற பொருளில் வருகிறது. இங்கே வரும்போது என்ற சொல்லில் போது என்ற சொல்   தக்கசமயத்தில் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.  வாழும்போது என்று எழுதினால் வாழும் காலத்தில் அதாவது வாழ்நாளில்  என்ற பொருள் கையாளப்பட்டுள்ளது  என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.     பொழுது சூரியன் வேளை ( சிறுபொழுது பெரும்பொழுது என்ற பொருள...

பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணிநிறைவுப் பாராட்டு மடல்                 ஜெயந்தி லிவிங்ஸ்டன்                 தலைமை ஆசிரியை                  நாள் 25 .06.2022. அகத்தியர் மலை பிறத்தலா (ல்) பொருநை நடக்கும்  நெல்லை எங்கும் தமிழுலா நடத்தலா அறப்பணி செய்தலா (ல்) தேவஞானம் தங்கப்பழம் இணையர் மடியுலா வான்மதி ஜெயந்தி தவழ்தலா! முத்து இருப்பது கத்தும் கடலிலா  முத்தச் சிதறல் ஜெயந்தியின் சிரிப்பிலா தேன் இருப்பது தேனடையிலா தேமதுர தமிழிசை நின் நாவிலா! ஆடலா பாடலா கலைக்கூடலா பேச்சுலா தேனுலா செந்தமிழுக்கு லிவிங்ஸ்டன் குத்தகையாளர் ஆதலா? கண்ணுலா கவினுலா கற்பனைத் தேருலா எண்ணுலா எழுத்துலா பண்புலா பாங்குலா- பிறர் நண்ணும் வண்ணம் பழகலா(ல்) அன்புலா அழகு மதியுலா கொள்ளிடம் நின் தலைச்சோற்றிலா! உழைத்தலா (ல் ) உவத்தலா உவத்தலா(ல் )உயர்தலா உயர்தலா(ல்) நல்லாசிரியராதலா நல்லாசிரியராதலா(ல் ) நற்புகழ் வாய்த்தலா ஓய்வில்லாப் பணியால் உடல் களைத்தலா களைத்தலா(ல்) தளை நீக்கி உயரப் பறத்தலா ! வாழ்த்து மழை பொழிதலா (ல்) வானம் மேக...

அன்பறிவு தேற்றம் அவாவின்மை...

அன்பறிவு தேற்றம் அவாவின்மை... "அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு"                         குறள் : 513 அன்பு- செயலின் மீது அன்பு அறிவு - அறிவு தேற்றம் -தெளிவான சிந்தனை அவா -ஆசை இன்மை -இல்லாதிருத்தல் இந்நான்கும்- இந்த நான்கு பண்புகளும் நன்குடையான்-நல்லபடியாகக் கொண்டவன் கட்டே- அவனிடத்தே தெளிவு-தேர்வு  அன்பு,அறிவு, தெளிவான சிந்தனை, ஆசையின்மை ஆகிய இந்த நான்கு பண்புகளும் நிலையாகக் கொண்டவனிடத்து ஒரு செயலைச் செய்யும் தெளிவு இருக்கும். விளக்கம்:  பிற உயிர்கள்மாட்டு அன்பு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் செயலறிவு இருக்க வேண்டும். எதைப்பற்றியும் தெளிவான சிந்தனை வேண்டும். பிறர் பொருட்கள் மீது ஆசை கொள்ளுதல் கூடாது. இந்த நான்கு பண்புகளும் இருந்தால் போதும். அவனால் ஒரு செயலைத் தெளிவாகச் செய்ய முடியும். ஒரு செயலைச் செய்வதற்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது செயலின் மீது அன்பு, அதைப்பற்றியஅறிவு, தெளிவானச் சிந்தனை, அவாவின்மை ஆகிய நான்கு பண்புகளும் ஒருங்கே அமைத்திருக்கிறதா என்பதை ஆ...

காக்கை கரைந்தால் விருந்து வருமா?

Image
காக்கை கரைந்தால் விருந்து வருமா? " விருந்து வருமாயின் கரைந்து காட்டு; வாராதாயின் நடந்து காட்டு" இப்படி காக்கையைப் பார்த்து  பள்ளிப் பருவத்தில் கூறியிருப்போம். காக்கை காலையில் இருந்தே கரைந்து கொண்டிருந்தால் இன்று நம்ம வீட்டுக்கு விருந்தினர் யாராவது வரப் போகிறார்களா? என்று அம்மா சொல்வதையும் கேட்டிருப்போம். காகம் கரைந்தால் போதும் விருந்தினர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் ஒன்று உண்டு. ஒரு காலத்தில் விருந்துக்கு  கட்டியம் கூறும் கட்டியங்காரர்  நம் காக்கையாராகத்தான் இருந்திருக்கிறார். விடுதியில் தங்கி படிக்கும்போது "கடிதம் வந்தால் பறந்து போ; பார்வையாளர் வந்தால் நடந்து போ "என்று காக்கை பின்னால் இருந்த காலம் ஒன்று உண்டு. இப்படி காகத்தின்மீது வைத்திருந்த நமது நம்பிக்கை  மூட நம்பிக்கையாகக்கூட இருந்திருக்கலாம். எது எப்படியோ அதனால் கிடைப்பது ஒரு சின்ன மகிழ்ச்சி.  காக்கை பறந்து போய்விட்டால் கடிதம் வரும் என்று தபால்காரரையே எதிர்பார்த்து  எத்தனை நாட்கள் இருந்திருப்போம். பழைய நினைவுகளில்  எத்தனை எத்தனையோ கதைகள் எழுதலாம்.! காக்கை இருந்து பனம்பழம...

காலைக் கதிரே ...

காலைக் கதிரவனே...... என் உறக்கம் கலைத்த காலைக்  கதிரவனே கண்திறந்ததும் காட்சியில் நின்றது  நின் திருமுகமே ! உன் முகம் விழித்ததால் மலர்ந்தன  மலர்முகமே செவ்வானம் பார்த்து சிரித்தன முல்லைவனமே!  தூங்கி இருந்த பனித்துளியை வாங்க வந்த திரள்கதிரே வான் பறவை கான் பறந்து  கானம்பாடி மகிழ்வது நின்கொடையே!   கீழ்வானில் செவ்வண்ணம் பூசி சிவக்க வைத்து சிலிக்க வைத்தது  நின்கைத் தூரிகை காட்டும்  ஒளி வண்ண மாயஜாலமே! இருட்டை விரட்டும் துறட்டை  எடுத்து வெளிச்சம் போட்டு பகலெனும் நாமம் ஏற்று நிற்கும் உலகின் உயிர்க்கவசம் நீயே! கீழ்வானில் பிறந்து உச்சம் தொட்டு  என்நிழல்  உன்நிழல் மறைத்து  தாழ வந்து தொடுவானில் மறைந்து  சொல்லும் தத்துவம் உரைத்தனையே! ஒருநாளும் விடுப்பெடுக்கா ஊழியனே!  தொய்வில்லாப் பயணம் நினதே ஓய்வின்றி உலகைக் காக்க  வலம்வரும் கதிரவனே வாழி!

நயனிலன் என்பது சொல்லும்...

நயனிலன் என்பது சொல்லும்.... " நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை"            குறள் - 193 நயனிலன் - நீதி இல்லாதவன் என்பது - எனப்படுவது சொல்லும் - சொல்லப்படும் பயனில - நன்மை தராதவற்றை பாரித்து- விவரித்து உரைக்கும்- சொல்லலும் உரை-  சொற்கள் ஒருவரிடம் அறம் இல்லை என்பதை அவன் பேசும் நன்மை தராத விரிவான பேச்சின் மூலம்  அறிந்து கொள்ளலாம். விளக்கம்: நாம் பேசும் சொற்கள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும். கேட்பவர்க்கு நன்மை பயப்பவனாக இருக்க வேண்டும். வெற்றுரைகளாக இருந்துவிடக் கூடாது. ஒருவர் பேசும் பேச்சுதான் அவரைப் பற்றிய மதிப்பீடு நல்லதாகவோ கெட்டதாகவோ அமைவதற்குக் காரணமாக இருக்கும். நிறைய பேசுவார். பேச்சில் ஒரு நன்மையும் இல்லை. அப்படியானால் அவர் உள்ளத்தில் உண்மை இல்லை. அறம் இல்லை. பிறர் மீது அக்கறை இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒவருடையப் பேச்சே அவரை இன்னார் என்று உலகுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். நயமற்ற சொற்கள் பயனற்றதாகத்தான் இருக்கும். பயனற்ற சொற்கள் ஒருவன் பேசுவானானால் அவன் அறமற்றவனாகத்தான் இருப்பான் என்கிறார் வள்ளுவர...

பணிநிறைவுப் பாராட்டு மடல்

          பணிநிறைவுப் பாராட்டு மடல்  ஆசிரியை சாந்தி ஞானராஜன் அவர்களுக்கு .... தண்டமிழ் வண்டை பூங்காடுடை தென்தமிழ் எல்லைநகர்  நன்மக்கள்  ஜெயசிங் முத்தாபரணம் மெத்தை மடியில் சில்லென்று பூத்ததிந்த செந்தாமரை சாந்தி   ! கொழுநன் ஞானராஜன்   கைத்தலம் பற்றியே கோநகர் மும்பைக்குச் சீராய்வந்த செந்தமிழே! இனிதாம்  இல்லறம்  சாட்சியாய் விழுதாய்ப் பிள்ளை இருவரானது நின்வரமே! கற்றவர் போற்றிடும்  நற்றிணையே நிற்பவர் யாவர்க்கும் நற்றுணை நீயே ஏட்டினில் அடங்கா மதியானவள் நீரோ வீட்டினில்  நந்தவனம் என்பதுன் பெயரோ! விண்ணமகள் பெற்றெடுத்த தண்ணிலவோ மண்மகள் மகிழும்  வான் மழையோ க(ண்)ணவன் கொண்டாடிடும் வானிலவோ-நீ மண்டு குணம்நிறை பேரறமோ ! கற்பனைக் கடங்கா கவிதை யானவளே சொற்றிறம்பா நாவறம்.  கொண்டனை நீயே! மருவில்லா வான் மதியே - நின் திருவாய் மலர்வில் மகிழ்வது என் மனமே! பிரைட் பள்ளியில் அறப்பணி ஆண்டு ஐயாறு பொய்யாது பாய்ந்த பைந்தமிழ்ப் பாலாறு தொய்யாது நடத்திய சொல்லாறு -என்று மெய்யாகச் சொல்லி நிற்கும் தமிழ் வரலாறு! ஓய்விலும் நின்பணி தொடர்ந்த...

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்....

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்.... உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்"                      குறள் : 394 உவப்ப - மகிழும் படியாக தலைக்கூடி- கலந்து பழகி உள்ள - நினைக்கும்படியாக பிரிதல்- நீங்குதல் அனைத்தே- அத்தன்மை கொண்டது புலவர் -கற்றறிந்தார்,ஆசிரியர் தொழில் - செயல்,இயல்பு மகிழும்படியாகக் கூடிப் பழகி,  நினைத்து நினைத்து வருந்தும்படியாகப் பிரிந்து போதல் கற்றறிந்த புலமை உள்ளவர்களின் இயல்பாகும். விளக்கம்: நம் உள்ளம் மகிழும்படியாக  இனிமையாக பேசும் இயல்புடைய ஒருவரோடு பழகினால் பிரிய மனமிருக்காது. அப்படியே பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் மறுபடி இவரை எப்போது பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பும் ஆவலும் மேலோங்கி இருக்கும். அப்படிப்பட்ட நல்ல பண்பு உள்ளவர்களும் இருக்கிறார்களா? என்று கேட்கத் தோன்றும். ஏன் இல்லை? நல்ல ஆசிரியரிடம் கல்வி கற்கிறோம். அந்த ஆசிரியரின் பிரிவு நம்மை வருத்தப்பட வைக்கவில்லையா? இப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் வாய்ப்பு இனி எப்போது வாய்க்கும் என்று எத்தனை நாள்  எத்தனை ஆசிரியர்களை நினைத்து நின...

ஐயுணர்வு எய்தியக் கண்ணும்....

ஐயுணர்வு எய்தியக் கண்ணும்.... "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு "                                குறள் : 354 ஐயுணர்வு- ஐந்து வகையான உணர்வுகள் எய்திய - அடைந்த,பெற்றிருந்த கண்ணும்- போதும் பயமின்றே - நன்மை இல்லை மெய்யுணர்வு - உண்மையறிவு இல்லாதவர்க்கு - பெற்றிருக்காதவர்க்கு உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்க்கு ஐம்புலன்களால் அறியப்படும் அறிவு இருந்தாலும்  அவற்றால் எந்த பயனும்   கிடைக்கப்போவதில்லை. விளக்கம்: மெய்,வாய் ,கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களால் அறியத் தக்க அறிவு எந்தவிதப் பழுதுமின்றி கிடைக்கப் பெற்றிருக்கிறது. உடலளவில் எந்தவிதத் குறைபாடும் இல்லை. அவை நல்லமுறையில் இருந்தால் மட்டும் போதுமா? வேறென்ன வேண்டும் என்கிறீர்களா? உண்மையைக்  கண்டறியும் அறிவு வேண்டும். ஐம்புலன் வழி பெறும் அறிவு இருந்தாலும் அவற்றைத் தன்வயப்படுத்தும் திறன் இல்லை என்றால் மனம் போன போக்கில் செல்ல நேரிடும். அதனால் அவற்றைத் தன் வயப்படுத்தும் அறிவும் இருக்க வேண்டும். உண்மையைக் கண்டறியும் அற...

பலசொல்லக் காமுறுவர் மன்ற....

பலசொல்லக் காமுறுவர் மன்ற.... பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லத் தேறா தவர்"                குறள் எண் : 649 பல -நிறைய,ஏராளமாக சொல்ல - சொல்லுவதற்கு காமுறுவர்-விரும்புபவர் மன்ற - திண்ணமாக,ஒரு தலையாக மாசு -குற்றம் அற்ற நீங்கிய சில -சிறிதளவு சொல்ல-சொல்வதற்கு தேறாதவர்- அறியாதவர் அவையின்கண் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கத் தெரியாதவர் நிறைய பேச வேண்டும் என்ற ஆவலால் மிகுதியாகப் பேசுவர். விளக்கம் : பேசுவது ஒரு கலை. எல்லாராலும் ஒன்றுக்கொன்று கோவையாக கேட்பவர் மனம் கொள்ளும்படி பேச முடியாது. ஆனால் நிறைய  பேச வேண்டும் என்று மனதில் ஆசை இருக்கும். ஆசை இருப்பதால் சிலர் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் நிறைய பேசிக் கொண்டிருப்பர். சுருக்கம் சொல்லி விளங்க வைக்க வேண்டும் .அதுதான்  நல்ல பேச்சாளருக்கு அழகு. பேசத் தெரியாதவர் அதிகம்  பேசவேண்டும் என்ற ஆர்வ மிகுதியால்  சொன்ன வார்த்தையையே திரும்பத் திரும்பப் சொல்லி நீட்டி  முனங்கிக் கொண்டிருப்பர். பேச்சில் பொருள் இருக்காது கேட்பவருக்குச் சலிப்பை ஏற்படுத்தும். வெற்றுப் சொற்களாகவே அவைஇருக்கும். ஒ...

ஒரு பிரசிடென்ட் உருவாகிறார்

ஒரு பிரசிடென்ட் உருவாகிறார் "மேலத் தெருவுல சுடலைமாடன் கோவில் பக்கத்துல சர்க்காரு அதிகாரிக வந்துருக்காவளாம். நீரும்  சட்டுன்னு ரெண்டு மொடக்கு நீத்தண்ணி குடுச்சிபுட்டு  ஓடிப் போய் என்ன யாதுன்னு பாரும் "  தோட்டத்துக்குப் போயிட்டு வந்ததும் வராததுமா தாத்தாவை  துரத்தாத  குறையா துரத்தித் கொண்டிருந்தார்  ஞானம்ம பாட்டி   "எதுக்கு வந்துருக்காவளாம்?" என்று கேட்டபடியே கட்டிலில் போய் உட்கார்ந்தார் வேதநாயகம் தாத்தா. "உக்காந்துட்டீரா? இனி எழும்ப ஒருமணி நேரம் ஆக்குவீர...." "எதுக்கு வந்துருகாவன்னு  கேட்டதுக்குப் பதில் சொல்லு" "என்கிட்ட சொல்லிகிட்டு தான் வந்துருக்காவ ஓடிப் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாரும்னா... எடக்குமடக்கா கேள்வி கேட்டுட்டு கிடக்கீரு" "என்னத்துக்கு யாதுக்குன்னு தெரியாம எதுக்குப் போகணும்?" "உம்மட்ட எல்லாத்தையும் ஒண்ணு விடாம எழுதணும்..போய் பாத்துட்டு வாரும்ன்னா பார்த்தூட்டு வாரும்ம...." "கூனுகுறுக்கு முறிய  ஏர் உழுது கிட்டு வந்துருக்கேன். செத்த குறுக்க அனத்த விட மாட்டாள... நொய்...நொய்ன்னுட்டு"?" . "ந...

ஞாலம் கருதினும் கைகூடும்....

"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்"                           குறள் : 484 ஞாலம் - உலகம் கருதினும்- விரும்பினாலும் கைகூடும் -கிடைக்கும்,எளிதில் வாய்க்கும் காலம்-- காலம்,நேரம் கருதி- அறிந்து இடத்தான்-இடத்தோடு பொருந்த செயின்- செய்தால் ஒரு செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து அது செய்ய வேண்டிய  இடத்தோடு ஒத்துப் போகும்படி செய்தால் உலகமே வேண்டும் என்று விரும்பினாலும் கைகூடும். விளக்கம்-: எல்லாருக்கும் ஓர் ஆசை இருக்கும். அந்த ஆசை நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் இறைவன் கையில் இருக்கிறது. இறைவன் மனசு வைத்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் அந்த நம்பிக்கை மட்டும்  இருந்தால் போதுமா? நீங்கள் முயற்சி செய்ய வேண்டாமா? முயற்சி செய்து பார்க்கிறேன். எதுவும் வாய்ப்பதில்லை என்று அங்கலாத்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்படி முயற்சி செய்தீர்கள்?  எந்த நேரத்தில் முயற்சி செய்தீர்கள்?  எந்த இடத்தில் முயற்சி செய்தீர்கள்?  கேட்கிறார் வள்ளுவர். "ஏற்ற காலமறிந்து சரியான இடத்தைத் தேர்...

செல்வம் நிலையில்லாதது

செல்வம் நிலையில்லாதது இருந்து சம்பாதித்தேன். பறந்து போய்விட்டது" என்பது போலத்தான் பணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். கைக்குக் கைமாறிக் கொண்டே இருக்கும். அதனால்தான் அதற்கு நாணயம் என்ற பெயரும் வந்ததோ ?என்ற ஐயமும் உண்டு. ஒரு செல்வந்தர் இருந்தார். இருக்க நேரமில்லாது ஓடி ஓடி உழைத்தார். பணம் பணம் என்று பணத்தின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்ததால் வேறு எந்தப் பக்கமும் அவரது கவனம் திரும்பவில்லை. நல்ல காரியங்கள் எதுவும் செய்ய நேரமில்லை.பிறகுப் பார்த்துக் கொள்ளலாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எந்த தான் தர்மமும் செய்யவில்லை. பணம் என்ன நிரந்தரமாகவா ஒருவரிடம் நிற்கப் போகிறது? ஒருநாள் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கையிலிருந்த பணமெல்லாவற்றையும் இழக்க நேரிட்டது. கையில்  ஒன்றுமில்லை  அக்கம் பக்கத்தில் யாரிடமாவது  கடனாகக் கேட்கலாம்  என்றால்  யாரும் முகத்தை எட்டிக்கூட  பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.இப்போதுதான்  அவருக்கு உலகம் புரிய ஆரம்பித்தது. பணமில்லாதவன் பிணம் என்று தெரிந்து கொண்டார். உன் வாயையும் பணப்பையையும் கவனமாகக் திற. அப்போதுதான் இரண்டிற்கும் மத...

எட்டாவது பிள்ளை

Image
எட்டாவது பிள்ளை  எட்டாவதும் பொட்டப் பிள்ளை பிறந்திருக்கு....பிள்ளை மூக்கும் முழியும் சரியா அப்பாவைப் போலவே இருக்கு...." வீட்டுக் கதவை மெல்லத் திறந்து கதவிடுக்கு வழியாக தகவல் சொல்லிவிட்டு போனார் மருத்துவச்சி. அதைக் கேட்டதும் வெளியில் நின்றிருந்த அனைவர் முகத்திலும் ஒரு சோகம் அப்பிக் கொண்டது. அப்பா பதிலுக்கு ஒரு வரிகூட பேசாமல் அப்படியே நின்றார். "சரி ...சரி... ஐந்து  பொட்ட பிள்ளைகள் பிறந்தால் அரசனும் ஆண்டி என்று ஒரு சொலவடை உண்டு. இதுவேற எட்டாவது பொட்ட.... கவலை படாதேயும். கடவுள் கொடுத்தது அவ்வளவுதான். இனி என்ன செய்யமுடியும்.? வளர்த்து ...ஆளாக்கி ஒருத்தன் கையில பிடுச்சி கொடுக்கும் வரைக்கும் உமக்கு இருக்கிற நாலு  குடுமி மயிறும்  போயிரும் "என்று முதலாவது தூபம் போட்டார் அங்கு  நின்றிருந்த ஒரு தாத்தா. "எட்டாவது ஒரு ஆம்பிளப்புள்ள பிறந்துருக்கப்பிடாதா....எட்டாவது பொட்டப்பிள்ள...எட்டிப்பார்த்த இடமெல்லாம் வெட்டன்னுல்லா சொல்லுவாவ... அதுக்கு என்ன செய்ய முடியும்? கொன்னா போட முடியும்?" என்று கொஞ்சம் எண்ணெயை ஊத்தி பத்தவச்சி போட்டுகிட்டு அங்கிருந்து சென்றார் மேலத்தெரு பாட்டி. அப்...

பாகப்பிரிவினையில் அம்மா

            பாகப்பிரிவினையில்  அம்மா     பாட்டி ...பாட்டி" கதவைத் தட்டினான் செல்வன்.   "  யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கிறேன்" குரல்    கொடுத்தபடியே   தட்டுத்தடுமாறி வந்து     கதவைத் திறந்தார் பாட்டி.        கதவைத் திறந்ததும் "யாரும்மா..    மூத்தவன் பிள்ளையா? சவத்து கண்ணும் தெரியல" என்றுபடியே கதவைத் திறந்தார் பாட்டி. "ஆமா...நான்தான்" என்றான் செல்வன்.     கையைப் பிடித்த பாட்டி "செல்வனா‌ மக்கா நீ ..    பள்ளிக்கூடத்துக்குப் போகல"     கரிசனமாக கேட்டார் பாட்டி.        "போகல..."ஒற்றை வார்த்தையோடு    பேச்சை முடித்துக் கொண்டான் செல்வன்.       " ஏன் போகல...அம்ம வீட்டுல இல்லையா?தோட்டத்துக்குப் போயிட்டாளா? பிள்ளைய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம் அப்படி என்ன பெரிய வேலை அவளுக்கு?" கோபமாகப் பேசினார் பாட்டி.      "இருக்காங்க..இருக்காங்க வீட்டுல...

இணரூழ்த்தும் நாறா மலரனையர்....

Image
இணரூழ்த்தும் நாறா மலரனையர்... " இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரிந்துரையா தார்"                               குறள் - 650 இணர் - கொத்தாக ஊழ்த்தும் - பூத்திருந்தும் நறா -,மணங்கமழாத மலர் - பூ அனையர் -ஒப்பர் கற்றது- கற்ற நூலின்பொருள் உணர - அறியும்படி விரித்து -விரிவாக உரையாடலாம் - உரைக்க மாட்டாதவர் தான் கற்றதை பிறர் உணரும் வண்ணம் சொல்லத் தெரியாதவர் கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லா மலருக்கு ஒப்பாவர். விளக்கம் : பேசுவது என்பது எல்லாருக்கும் வாய்க்காத ஒரு கலை. எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஒரு சிலரால் மட்டுமே அதனைப் பிறர் மத்தியில் பேச முடியும்.   . நமது அறிவை பிறர் முன்னிலையில் வெளிப்படுத்தத் தெரியவில்லை என்றால் கத்தைக் கத்தையாகக் கண்டதை எல்லாம் கற்றிருந்தாலும் அதனை தன் எல்லைக்குள்ளே வைத்துக் கொண்டு உள்ளுக்குள்ளேயே மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான். நாம் கற்ற கல்வியால் பிறர்க்கு எந்தவிதத் பயனும் கிடைக்கப்போவதில்லை. கல்வி கற்றிருந்தால் அதனைப் பிறர் முன்னால் விரிவாகச் சொல்லும் திறன் பெற்றிருக்க...

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்.....

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் .... " கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்"               குறள் :894 கூற்றுத்தை - எமனை கையால்- - கையைக் காட்டி விளித்தற்றால்-விளிப்பது போன்றது ஆற்றுவார்க்கு- வலிமையுடையவர்க்கு ஆற்றாதார்-வலிமையில்லாதார் இன்னா - தீங்கு செயல்- செய்தலாகும் ஆற்றல் இல்லாத ஒருவர்  ஆற்றல் உடையவருக்கு எதிராக  தீங்கிழைப்பது   , தாமாகவே  அழிக்க வல்ல  எமனை  வலிய  கைகாட்டி  அழைப்பது போன்றதாகும். விளக்கம்:  எப்போதுமே  ஒத்த வலிமையுடையவரோடு மோத வேண்டும். வலிமை இல்லாதவரோடு போரிடுவது அரசர்களுக்கும் அழகாகாது. சாதாரண  மக்களுக்கும் அழகாகாது. அரசனாக இருந்தால் எதிரி தன்னைவிட படைபலம் மிக்கவனாக இருந்தால் போரிடாமல் இருப்பது நலம். அதேபோன்று சாதாரண மனிதர்களும்   தன்னைவிட வலிமை  அதிகம் உடையவரோடு மோத நினைத்தால் அது அழிவில்தான் கொண்டு விடும். எதிராளியின் வலிமையைத் தெரிந்திருந்தும் அவனை எதிர்த்து நிற்க நினைப்பது எமனை நாமாகவே கையசைத்து வா என்று அழைப்பதற்கு ஒப்பானதாகும...

வெல்லும் சொல்லும் கொல்லும் சொல்லும்

Image
வெல்லும் சொல்லும் கொல்லும் சொல்லும் "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து" என்றார் வள்ளுவர். நாம் பேசுகிற சொல்லை இன்னொரு சொல் வெல்ல முடியாது என்பதைத் தெரிந்த பின்னரே அந்தச் சொல்லைப் பயன் படுத்த வேண்டுமாம். நமது சொல்லில் குற்றம் கண்டுபிடித்துவிடக் கூடாது. நமது சொல்தான் இறுதித் தீர்ப்புக்கு உரியதாக இருக்க வேண்டும். உள்ளங்களை வெல்லும் சொல்லாக  இருக்க வேண்டும். "சொல்லைப் பற்றி எங்களிடமேயா?  அட...போங்கங்க... நாங்கள் சொல்லுவதையும் சொல்லுவோம்.  சொல்லாததையும் கூட  சொல்லுவோமில்ல...   கூட்டிச் சொல்லணுமா?   கழித்துச் சொல்லணுமா?   பெருக்கிச் சொல்லணுமா ?    வகுத்துச் சொல்லணுமா?    எல்லாம் கணக்குப் போட்டு பேசுவோமில்ல..." என்ற மனக்கணக்கு எனக்குப் புரிகிறது. " கணக்குப் போட்டுப் பேசுவது   எல்லாம் சரிதான்.  கணக்கில்லாமல் பேசிவிட்டு   பேந்த பேந்த என்று எத்தனை   இடங்களில் விழித்திரருப்பீர்கள். சற்றே பின்நோக்கித் திரும்பிப் பாருங்கள்."     " வெல்லும் சொல்... கொல்லும் சொல் ... ...