நட்ட கல்லைத் தெய்வம் என்று....
நட்ட கல்லைத் தெய்வம் என்று... தமிழகத்தைச் சார்ந்த பதினெட்டு சித்தர்கள் சித்தர்களுள் தலையாயச் சித்தர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் நூற்றுக்கணக்கான சித்தர்களும் உண்டு. சித்தர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள் . பேரறிவு படைத்தவர்கள். எண் பெருஞ் சித்திகள் அதாவது அட்டமா சித்திகளைப் பெற்றவர்கள். சித்தர்கள் என்றாலே நிறைமொழி மாந்தர் என்று பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்களில் குறிப்புகள் உள்ளன. சித்தர்கள் வான சாத்திரம் ,கைரேகை சாத்திரம் தாவரவியல் நூல், சோதிட நூல்,கணித நூல், மாந்திரிகம் இரசவாதம் ,வைத்தியம் போன்ற பல்வேறு துறைசார் இலக்கியங்களைப் படைத்துள்ளனர். பண்டைய அறிவியல் அறிவின் சிகரமாம் சித்தவைத்தியம் பற்றி சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர். நமது உடம்புதான் பரமாத்மா. ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உன்னுள்ளும் இர...