Posts

Showing posts with the label கொரோனாவிடம் கற்றேன்

கொரோனாவிடம் கற்றேன்

Image
            கொரோனாவிடம் கற்றேன்  கவளச்சோற்றுக்காய் ஆலாய்ப் பறக்கும்   கண்ணீர் மாந்தர் கதைகளைக் கேட்டேன்   கடக்க நினைத்த பாதைகள் எல்லாம்   கானல் ஆறெனப் பாடம் கற்றேன்!            கண்களை மூடி நெடுநாள் கிடந்தேன்   கனவிலும் மிரட்டும் பேயென பயந்தேன்  காலாற நடக்கும் இன்பத்தைத் தொலைத்தேன்  கால் இல்லா கொடுமை இதுவென சபித்தேன்!   சுழற்சியில் உலகம் இயங்கிட கண்டேன் பிறழ்ச்சி ஏதென புரியாது நின்றேன் உயர்ச்சியைத்தேடி ஓடிடும் கால்கள் தளர்ச்சியாய்த் தடுமாறுதல் கண்டேன்! ஒற்றைக் காயை வட்டிலில் தேடலில் வெற்றுக் குழம்பும் சுவையென உணர்ந்தேன்  வேண்டா வெறுப்பாய் தின்றவை யாவும் விருப்ப உணவாய் மாறிட கண்டேன்!              மூலையில் முடங்கிடும் முதுமையை நினைத்தேன் முடக்குதல் பாவம் என்பதைப் புரிந்தேன் தூக்கியே அருகில் வைத்திட நினைத்தேன் முடியா நிலைமையில் ஊமையாய்க் கிடந்தேன்!         பசியின் வலியால் துடிப்போர் கண்டேன்   கொடிது கொடிது...