Posts

Showing posts with the label மனதில் உறுதி வேண்டும் -பாரதியார்

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்  மனதில் உறுதி இருப்பவர்கள் எதையும் சாதிக்கும் துடிப்பு  மிக்கவர்களாக இருப்பர். தளர்ச்சி என்பது அவர்கள் அகராதியில் இருக்காது. வேகமும் துடிப்பும் அவர்கள் செயலில் இருக்கும்.  வெற்றி பெற வேண்டும் என்ற தணியாத் தாகம் அவர்கள் தேடலில் இருக்கும். மனதில் உறுதி இருந்தால் எந்தச் சோர்வும் கிட்ட அண்டாது. இதை மனதில் வைத்துதான் பாரதி மனதில் உறுதி வேண்டும் என்ற பாடல் பாடியிருக்க வேண்டும். இதோ பாரதியின் அந்தப் பாடல். மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் ஓம்! ஓம்! ஓம்! ஓம்! அருமையான பாடலில்லையா? மனதில் உறுதி வேண்டும். உறுதி மட்டும் இருந்தால் போதுமா?  பேச்சில் இனிமை வேண்டாமா? பேச்சு ஒன்று நினைவு ஒன்று என்று மாறுபாடாக இருக்கலாமா? கூ...