பாவ் பீச் விழா
பாவ் பீச் விழா பாவ் பீச் என்பது மராட்டியம் முதலான வடஇந்திய மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தீபாவளி நாளின் ஐந்தாம் நாள் கொண்டாட்டமாக பாவ் பீச் விழா நடைபெறுகிறது. நரகாசுரன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் இந்திரலோகத்து மன்னன் இந்திரனை வென்று சொர்க்கபுரியைக் கைப்பற்றி கொண்டான். அது மட்டுமல்லாமல் அங்கிருந்த பதினாராயிரம் பெண்களையும் சிறைப்பிடித்துச் சென்றான். தேவேந்திரன் தாயானான அதிதி அணிந்திருந்த மந்திரக் கம்மலையும் எடுத்துச் சென்றுவிட்டான். இப்போது தேவர்கள் அனைவரும் தங்களை காக்கும்படி மகா விஷ்ணுவிடம் ஓடிச் சென்று தஞ்சம் அடைகின்றனர். இந்த நரகாசுரனின் ஆணவத்தை அடக்கி எம்மையும் மக்களையும் காக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொள்கின்றனர். தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக விஷ்ணு பகவான் நரகாசுரனை அழிக்கிறார். பெண்களையும் தாய் அதிதியின் மந்திரக் கம்மலையும் மீட்டு வருகிறார். நரகாசரன் அழிந்த மகிழ்ச்சியைத்தான் தீபாவளியாகக் கொண்டாடி வருவது யாவரும் அறிந்த ஒன்று....