Posts

Showing posts with the label விதியின் பயனே பயன் -மூதுரை

விதியின் பயனே பயன்

விதியின் பயனே பயன்  ஏகன் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தான்.அவனுக்கு வள்ளி என்று ஓர் அருமையான  மனைவி வாய்த்திருந்தாள். வாய்க்கு ருசியாக வகைவகையாக உணவு சமைத்துக் கொடுப்பாள். ஏகன் வயலிலிருந்து வருவதற்கு முன்னர் சமைத்து வைத்துவிட்டு வீட்டுத் திண்ணையிலேயே ஏகன் வருகைக்காகக் காத்திருப்பாள். ஒருநாள் ஏகன் வரகு சோறு சமைத்து வைக்கும்படி சொல்லி விட்டுச் சென்றான். வள்ளியும் ஏகன் சொல்லியது போல வரகு சோறும் கறியும் சமைத்தாள். சமையல் முடிந்ததும் ருசி பார்ப்பதற்காக சிறிது வரகு சோறும் கறியும் ஊற்றி சாப்பிட்டுப் பார்த்தாள். அடடா....என்ன பிரமாதம்! என்றுமில்லாத படி இன்று உணவு இவ்வளவு சுவையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்று மறுபடியும் எடுத்து சாப்பிட்டாள். இன்னும் ஆசை தீர்ந்தபாடில்லை. உணவின் சுவை இன்னும் கொஞ்சம் சாப்பிடு...இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று சுண்டி இழுத்தது. அந்த ஈர்ப்பில் மறுபடியும் மறுபடியும் சாப்பிட்டு பானையில் இருந்த மொத்த சோற்றையும் சாப்பிட்டு முடித்து விட்டாள் வள்ளி. உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டல்லவா? வள்ளியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? அப்படியே தூங்கிவிட்டாள் ...

விதியின் பயனே பயன்

விதியின் பயனே பயன்  "ஆழ அமுக்கி முகக்கினும்  ஆழ்கடல்நீர் நாழி முகவாது .... ...." இது ஔவையின்  மூதுரையில் உள்ள ஒரு ஒரு அருமையான பாடல்.  கருத்துள்ள பாடல்.  ஏன் அறிவியல் கருத்துள்ள பாடல்  என்றே சொல்ல வேண்டும்.   பாடல் பாடிய களம் எப்போதும்போல் போகிற போக்கில் ஔவை பாடியது தான். ஆனால் பாடலின் கருத்து நம்மை நின்று  கேட்க வைக்கிறது. உலக நடைமுறையும் இதுதானே என்று உணர வைக்கிறது. எதுவும் கொடுத்து வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். சில நேரங்களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலேயே போய்விடும். சட்டி நிறைய உணவு இருந்தாலும் கடைசி நேரத்தில் சாப்பிடமுடியாமல் போய்விடும்.சூழ்நிலை அப்படி அமைந்துவிடும். ரயில் பயணங்களில் போது அனைவரும் ருசித்து வாங்கிச் சாப்பிடும் ஒருபொருளை வாங்கிச் சாப்பிட ஆசைப்பட்டு நாமும் வாங்க செல்வோம். ஆனால் நாம் போன நேரம் பார்த்து அந்தப் பண்டம் தீர்ந்து போயிருக்கும். அல்லது நாம் இறங்கிப் போகும் முன்னர் ரயில் புறப்பட்டு விடும். அதனால் கைக்கு எட்டிய தூரத்தில் பொருள் இருந்தும் வாங்கி சாப்பிட முடியாமல் போயிருக்கும். மாட்டு மடியில் சொம்பு நிறைய பால் கறந...