லோட்டாவோடு வந்த விலங்குகள்
லோட்டாவோடு வந்த விலங்குகள் தொலைவில் பறக்கும் பறவையைத் தொடர்ந்து பலநாள் பார்த்தபடி சிறுவன் ஒருவன் நின்றிருந்தான் கம்பி சன்னல் உள்ளிருந்து கண்ணால் கடிதம் எழுதியே கருணை மனு அனுப்பி வந்தான் காட்சிப் பொருளாய் நின்றிருந்தும் பறவை கூட்டம் யாவுமே பாராமுகமாய்ச் சென்றன பச்சைக்கிளி ஒன்று மட்டும் பக்கம் வந்து அமர்ந்தபடி பரிவாய் முகத்தைப் பார்த்தது தம்பி உன்றன் கண்களிலேயே கவலை இருப்பதைப் பார்க்கிறேன் ஏதுன் குறை என்றுரைத்தால் இயன்ற மட்டும் உதவுவேன் என்றே சொல்லி அமர்ந்தது பலநாள் வீட்டில் அடைபட்டு மனசு நொந்து கிடக்கிறேன் முடமாகித்தான் போவேனோ முழுசாய் உலகை மறப்பேனோ நாலுந் தெரியா சிறுவனாய் நாலு சுவருக்குள் கிடப்பேனோ பள்ளி என்பதை நான் மறந்து பலநாள் ஆகி போயிற்று ஓடி ஆடும் நாட்கள் எல்லாம் இனியும் எனக்கு வாராதோ துளியும் தவறு செய்யா எம்மை முடங்கிப் போடுதல் ஞாயமோ? மனசு நொந்த சிறுவனும் நீர்வார்க் கண்களோடுதான் நீதி கேட்டு நின்றிட்டான் துள்ளித் திரியும் பருவத்தில் துவண்டு கிடத்தல் ஆகாது என்னால் ஒன்றும் இயலாது என்றன் பறவை கூட்டத்தில் உன்றன் பிரச்சினையை எடுத்துரைத்து ஏதும் ...