Posts

Showing posts with the label புத்தாண்டு தீர்மானம் -தன்னம்பிக்கை கட்டுரை

புத்தாண்டு தீர்மானம்

நம்பிக்கை தரும் புத்தாண்டு  புத்தாண்டு பிறந்தாகிவிட்டது. புதுப்புதுச் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தாண்டில் என்ன செய்யலாம்  என்னென்ன மாற்றங்களை நடைமுறைப்படுத்தலாம் என்னென்ன வாங்கலாம் எவ்வெவற்றைத் தவிர்க்கலாம் இப்படி ஆயிரத்தெட்டு சிந்தனைகள் குறுகுமறுக்காக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் புத்தாண்டு தீர்மானமாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமே என்ற எண்ணமும் முளைத்து முன் வந்து நின்று விடை கேட்டு நிற்கிறது. கடந்த ஆண்டு எடுத்த தீர்மானம் நாலு நாட்கள் நடைமுறைப்படுத்தபட்டு நட்டாற்றில் விடப்பட்டது. அதற்குள் இந்த ஆண்டு தீர்மானமா என்று  கேட்கத் தோன்றும். இது ஆண்டாண்டு நடப்பதுதான். இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கல்ல. கடந்த ஆண்டில்  கெட்டப்பழக்கத்தைக் கைவிட்டு விடுவேன்  நல்லது செய்வேன். கோபப்பட மாட்டேன். நன்றாகப் படிப்பேன். பெற்றோரிடம் எதிர்த்துப் பேச மாட்டேன். அதிகமாக டீ குடிக்க மாட்டேன். அதிக நேரம் தூங்க மாட்டேன் யாரிடமும் சண்டையிட மாட்டேன். ஒழுங்காக நடைப்பயிற்சி மேற்கொள்வேன். உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்வேன். இப்படி ஆளாளுக்கு அவரவர் வயதுக்கு ஏற்ப சூ...