யான்நோக்குங் காலை நிலன் நோக்கும்....
யான் நோக்குங் காலைநிலன் நோக்கும்.... யான்நோக்குங் காலைநிலன் நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் " குறள் : 1094 யான் _ நான் நோக்குங்காலை _ பார்க்கும் பொழுது நிலன் நோக்கும் _ நிலத்தைப் பார்க்கும் நோக்காக்கால் _ பார்க்காதபோது தான் நோக்கி _ தலைவனைப் பார்த்து மெல்ல நகும் _ மெதுவாக புன்னகைக்கும் நான் பார்க்கும்போது பாராததுபோல நிலத்தைப் பார்ப்பாள்.நான் பார்க்காதபோது மெதுவாக என்னைப் பார்த்து புன்முறுவல் கொள்வாள். விளக்கம் : தலைவன் பார்க்கும்போது தலைவி பார்க்க மாட்டாளாம்.பார்க்காததுபோல வெட்கத்தால் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாளாம். தலைவன் அந்தப் பக்கம் திரும்பியதுதான் தாமதம் தலைவனைப் பார்த்து மெதுவாக தனக்குள்ளே புன்ன...