Posts

Showing posts with the label கருதியவாறாமோ கருமம்? - மூதுரை பாடல் 22

கருதியவாறாமோ கருமம்

கருதியவாறாமோ கருமம்? நாம் நினைப்பது போன்றா  வாழ்க்கை அமைகிறது?   அப்படி அமைந்திருந்தால்  கணக்கு வழக்குகளை சரியாக எழுதி முடித்து வைத்துதிருப்போமே... ஆனால் நாம் ஒன்று எழுத வாழ்க்கைத்தரத்தை வேறொரு திசையை நோக்கி இழுக்க... இடையில் எங்கே குளறுபடி நடந்தது? முட்டிமோதி மனம் விசாரணைக்குக் கூண்டில் நம்மை ஏற்றி வைத்து விசாரித்துக் கொண்டிருக்க பதில் சொல்ல முடியாமல் நாம் திருதிருவென்று விழிக்க.... இப்படியாக ஏதேதோ திருப்பங்களோடு வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? எங்கே தப்பு நடந்தது ? நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறோம். ஒரு தப்பும் கண்களில் படவில்லை. அப்படியானால்...அப்படியானால்.... இந்த வாழ்க்கைதான் என்ன? நினைவுகளில் கண்கள்கலங்கி  நிற்கும்போது கண்ணதாசன் எழுதிய பாடல் காற்றினில்  வந்து காதோடு பேச.... " நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே  நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது..." மனம் மறுபடியும் மறுபடியும் க...