ஆழ அமுக்கி முகக்கினும்...
ஆழ அமுக்கி முகக்கினும்.... கன் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தான்.அவனுக்கு வள்ளி என்று ஓர் அருமையான மனைவி வாய்த்திருந்தாள். வாய்க்கு ருசியாக வகைவகையாக உணவு சமைத்துக் கொடுப்பாள். ஏகன் வயலிலிருந்து வருவதற்கு முன்னர் சமைத்து வைத்துவிட்டு வீட்டுத் திண்ணையிலேயே ஏகன் வருகைக்காகக் காத்திருப்பாள். ஒருநாள் ஏகன் வரகு சோறு சமைத்து வைக்கும்படி சொல்லி விட்டுச் சென்றான். வள்ளியும் ஏகன் சொல்லியது போல வரகு சோறும் கறியும் சமைத்தாள். சமையல் முடிந்ததும் ருசி பார்ப்பதற்காக சிறிது வரகு சோறும் கறியும் ஊற்றி சாப்பிட்டுப் பார்த்தாள். அடடா....என்ன பிரமாதம்! என்றுமில்லாத படி இன்று உணவு இவ்வளவு சுவையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்று மறுபடியும் எடுத்து சாப்பிட்டாள். இன்னும் ஆசை தீர்ந்தபாடில்லை. உணவின் சுவை இன்னும் கொஞ்சம் சாப்பிடு...இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று சுண்டி இழுத்தது. அந்த ஈர்ப்பில் மறுபடியும் மறுபடியும் சாப்பிட்டு பானையில் இருந்த மொத்த சோற்றையும் சாப்பிட்டு முடித்து விட்டாள் வள்ளி. உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டல்லவா? வள்ளியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? அப்படியே தூங்கிவிட்டாள்...