Posts

Showing posts with the label வெற்றிக் கணக்கு-தன்னம்பிக்கை கட்டுரை

வெற்றிக் கணக்கு

வெற்றிக் கணக்கு  " மனங்களைக் கொள்ளையுங்கள். வெற்றி உங்கள் கையில்." இப்படி ஒரு விளம்பரம். ஆஹா....புதுமையான விளம்பரமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்? மனதிற்குள் அதைப்பற்றிய விவாதத்தை ஓடவிட்டேன். உண்மைதான்....மனங்களைக் கொள்ளையடித்தால் வெற்றிதான் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. என்ன கொள்ளையடிப்பதற்கு உடன்பாடா? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இது என்னப்பா? மனங்களைக் கொள்ளையடித்தால் வெற்றியா? இது என்ன புதுக்கணக்கு? என்று கேட்கிறீர்களா? புதுக்கணக்கு மட்டுமல்ல... புதுமையான கணக்கு.... கொள்ளையடித்து தந்தான் பாருங்களேன் கொள்ளையடிக்க வேண்டுமா? மொகலாய மன்னர்கள் கோவில்களில்  கொள்ளையடித்துச் சென்றார்கள்  என்று படித்திருக்கிறோம்.    முகமூடிக் கொள்ளையர்கள் கடைகளில்  கன்னக் கோலிட்டு திருடிச் சென்றதாக  கேள்விப்பட்டிருக்கிறோம்.  லாரி லாரியாக மணல் கொள்ளை நடைபெற்று  வருவதாக வாசித்திருக்கிறோம்.     இது என்ன புதுக்கொள்ளை? இது பொருட்கொள்ளை அல்ல.... மனக்கொள்ளைதான். யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக கொள்ளையடித்து விடலாம். "கமுக்கமாக முடித்துவிடலாம...