தமிழ் மன்னர்கள் கற்றுத்தரும் போர் தர்மம்
தமிழ் மன்னர்கள் கற்றுத்தரும் போர் தர்மம் "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை" என்பார் வள்ளுவர். அறத்திற்கு மட்டுமே அன்பு வேண்டும் என்று சொல்பவர்கள் அறியாதவர்கள். மறத்திற்கும் அதாவது வீரத்தை வெளிப்படுத்தும் இடங்களிலும் அன்புதான் துணையாக நிற்கும். நிற்க வேண்டும். அதுதான் அறம். இதுதான் வள்ளுவர் நமக்குச் சொல்லித் தந்த பாடம். வள்ளுவருக்கு என்ன? அவர்பாட்டுக்குச் சொல்லி விட்டுப் போய்விட்டார். போர் செய்யும் இடம் எப்படி அன்பு காட்டும் இடமாக இருக்க முடியும்.? போர் செய்யும் இடத்தில் அன்புக்கோ மனிதாபிமானத்திற்கோ இடமளிக்கக்கூடாது. எதிரி என்றால் எதிரிநாட்டு உயிர்களும் எமக்கு எதிரிகள்தான். அதனால் யார் எவர் என்று பார்க்காதே. கண்ணிவெடி வைத்தோ ஏவுகணை வீசியோ எதிரி நாட்டை அழிக்க வேண்டும். அதுதான் எமது இலக்கு . இதில் யார் தொலைந்தால் என்ன? யார் மாய்ந்தால் என்ன? என்பதுதான் இன்றைய போர் தர்மம்...இல்லை....இல்லை. போர் அதர்மம். இன்றைய போர்க்கள காட்சிகளும் நிகழ்வுகளும் நம்மை இப்படித்தான் நினைக்க வைக்கின்றன. மனம் வெம்பிப் பேச வைக்கின்றன. உக்ரைன் போரில் பெற்றோரை இழந்து அ...