சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
சோழியன் குடுமி சும்மா ஆடுமா " சோழியன் குடுமி சும்மா ஆடுமா? " இந்தப் பழமொழியைக் கேட்டதும் குடுமி வைத்த ஆட்கள் கண்முன் வந்து குடுமியை ஆட்டிக்கொண்டு நிற்பர் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. நாம் இன்று பயன்படுத்தும் பழமொழிக்கும் குடுமிக்கும் சம்பந்தமே இல்லை. சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை எடுத்து வந்து எப்படி பழமொழியாகப் பயன்படுத்த முடியும்? ஏதாவது ஒரு பயன் கருதி நம்மோடு நெருங்கிப் பழகுபவர்களைப் பார்த்து சொல்லும் பழமொழி இது. அதாவது பலனை எதிர்பார்த்து பம்முகிறவரைப் பார்த்து சொல்லும் பழமொழியாகிப் போனது இந்தச் சோழியன் குடுமி. ஜால்ரா போடும் நபர்களைப் பார்த்துப் சொல்லப்படும் பழமொழி . அடிக்கடி ஜால்ரா போட்டுத் தலையை ஆட்டினால் குடுமி ஆடத்தானே செய்யும் என்கிறீர்களா? இருக்கும் ...இருக்கும்... அதனால்கூட இருக்குமோ? பழமொழியாயினும் பாடலாயினும் படிப்பவரின் கருத்துதான் முந்தி வந்து பந்தியைப் பிடிக்கும். என்ன நோக்கத்திற்காகச் சொல்லப்பட்டது சொல்ல வந்த கருத்துதான் என்ன என்பது எழுதியவருக்கு மட்டுமே தெரியும். பல பழமொழிகளின் பொருள் காலப்போக்கில் சொல்லப்...