முதுமொழிக்காஞ்சியின் தண்டாப் பத்து
முதுமொழிக்காஞ்சியின் தண்டாப் பத்து முதுமொழிக்காஞ்சியின் பத்தாம் பத்து தண்டாப் பத்து எனப்படும். 'தண்டான் ' என்றால் தவறமாட்டான், தவிர்க்க மாட்டான், விலக்க மாட்டான் என்று பொருள்படும். யார் யாரெல்லாம் எதை எதைத் தவிர்க்க மாட்டார்கள் என்பதை மதுரை கூடலூர் கிழார் தண்டாப் பத்து என்ற கடைசிப் பத்தில் அருமையாகக் கூறியுள்ளார். பாடல் உங்களுக்காக... 1. " ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான். கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்கள் தவிர்க்கக் கூடாதவை யாதெனில், முன்னேற விரும்புபவன் உயர்ந்தோர் நல்மொழிகளைப் பின்பற்றி நடக்கத் தவறமாட்டான். 2. " வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான். வளர்ச்சியை விரும்புகிறவன் புகழுக்குரிய செயல்களைச் செய்யத் தவறமாட்டான். 3. " கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்." கல்வியைப் பெற நாட்டம் கொண்டவன் ஆசிரியருக்கு மரியாதை செய்வதிலிருந்து தவறமாட்டான். 4. " நிற்றல் வேண்டுவோன் தவம்செயல் தண்டான். உலகில் புகழுடன் நிலைத்து நிற்க விரும்புகிறவன் உயர்ந்த தவம் புரிதலில் இருந்து தவறமாட்டான். 5. " வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்ட...