இலக்கியம்
இலக்கியம் தாலசைத்துத் தமிழ்ப்பாலூட்டி தாலாட்டிப் பாராட்டி முதல் இலக்கியம் முன்மொழிந்து பாட்டன் பாட்டி உறவுமுறை உணர்வினில் ஏற்றி தமிழ்ப் பாலூட்டிய தாய்க்குத் தலை வணக்கம்! சீரமைச் செவிக்கின்பத் தேனருந்த வந்திருக்கும் தமிழ்ச் சொந்தங்களுக்கு கோடானு கோடி வணக்கம் மலையைப் பெயர்த்து மடிப்பைக்குள் வைக்க நினைப்பதுபோல காற்றைப் பிடித்து கைப்பைக்குள் அடைக்க விரும்பும் சிறுவன் போல வான் நிலவை நீள்கயிற்றால் இழுத்திட அலையும் குரங்கினம் போல அலைகடலைச் சிற்றலகால் அள்ளி வற்றிட முனையும் புள்ளினம்போல இலக்கியப் பெருங்கடல் முன்னர் பேராசை கொண்டு நிற்கின்றேன் வெற்றுச் சொற்களோடு விளையாட்டில் முந்திட முயல்கின்றேன் காதல் காதலரோடு மட்டும் கைகோத்துக் கண் சிமிட்டும் ஆன்மீகம் ஆன்மீகவாதிகளின் தனியுடைமை எனத் தனித்து நடை போட்டிடும் நட்பு வட்ட...