விடைபெற மறுக்கும் பள்ளி
பள்ளிப் பருவத்தில் துள்ளி விளையாடிய இடங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்! கண்களில் ஏக்கம் நடந்த இடங்களில் மறுபடி என் காலடி பதித்து தடம் அழிந்து போகாதபடி மெல்ல நடக்கிறேன்! தூண்களைச் சுற்றிச் சுற்றி தேய்த்த இடங்களில் சேதாரம் இருக்கிறதா பட்டு விரல்களால் மெல்ல தொட்டுப் பார்க்கிறேன் கண்களில் இட்டு வணங்குகிறேன்! முட்டிபோட மறுத்த முழங்கால் மறுபடி தனக்கு ஒரு வாய்ப்பு கேட்டு தடுமாறி நின்றிட வகுப்பறையின் வராண்டாவில் வாய்தா கேட்டு நிற்கின்றேன்! தலைமை ஆசிரியர் வாயில் காத்துக் கிடக்கும் காலம் இனி உனக்கு இல்லை சொல்லாமல் சொல்ல நக்கலாய் பேசிய சொற்கள் விக்கலாய் தொண்டைக்குள் சிக்க திருகும் கால்களைத் திருப்ப அழைக்கிறேன் முடங்கினில் திரும்ப அடம்பிடிக்கும் முரட்டுக் காளைகள் போல கால...