Posts

Showing posts from December, 2021

புத்தாண்டு வாழ்த்து

Image
புத்தாண்டு வாழ்த்து முந்நூற்று அறுபத்தைந்து முத்தான நாட்களின் முதல்நாள் முதல் விடியல் வெள்ளைக்  காகிதத்தை நீட்டி கோலம் செய்திட பணிக்க விரல்கள் காகிதத்தை நெரிக்க செயல்கள் சித்திரமாய் விரிய சத்தான உள்ளுறைக்கு  முத்தான அச்சாரமிட்டு  முத்தாய்ப்பாய் முன்னுரை எழுதி முதற்பக்கம் தொடங்கிட  வாழ்த்துகின்றேன்! செயல்களால் நாட்களைச் செதுக்கிட விழைகின்றேன்! முதற்தரமான வினைகளால் முந்நூற்று அறுபத்தைந்து பக்கங்களும் எழில் பெற இறைவன் அருள்  தந்திட வேண்டுகின்றேன்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

புத்தாண்டு உறுதிமொழி

புத்தாண்டு உறுதிமொழி "சந்திரா என்ன....புத்தாண்டுக்கு தயாராகிக்கொண்டிருப்பதுபோல இருக்கிறது" "என்னது?.... புத்தாண்டு வந்தாச்சா? சொல்லவே இல்ல...." "ஏன் உன்னிடம் அனுமதி கேட்டுத்தான் புத்தாண்டு வர வேண்டும் என்ற நியதி ஏதேனும் இருக்கா? "அதற்குள்ளாக   ஓர் ஆண்டு ஆயிடுச்சா? கண்மூடி கண் திறப்பதற்குள்   ஓராண்டு முடிந்தது போல் இருக்கிறது." "இருக்கும்...இருக்கும்... கண்களை மூடிக் கொண்டே இருந்தால் கண்கள் திறப்பதற்குள் என்னன்னவெல்லாமோ  நடந்து முடிந்துவிடும்." "அப்படித்தாங்க இருக்கிறது. எப்படி இந்த ஓராண்டு போயிற்று என்றே தெரியவில்லை. ஆனால் ஒண்ணு சொல்றேங்க.... ஓராண்டுக்குள் என்னவெல்லாமோ  நடந்து போச்சு...." "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்" "உங்கள் வாழ்த்துக்கு நன்றி." "இந்தப் புத்தாண்டிற்கு ஏதேனும்  உறுதிமொழி எடுக்கும் உத்தேசம் உள்ளதா?" "அட போங்கங்க... நான் கடந்த ஆண்டு என்ன உறுதிமொழி எடுத்தேன் என்பதை நினைவுபடுத்திப் பார்த்துவிட்டுப் பேசுகிறேன்" ...

தேடிச் சோறு நிதந் தின்று....

தேடி சோறு நிதந்  தின்று.... வயிற்றுக்காகத்தானே இந்தப்பாடு என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எண்சாண் உடம்பில் ஒரு சாண் வயிறே பிரதானம் என்று வாழ்பவர்களைப் பார்த்திருக்கிறோம். அதெல்லாம் ஒரு வாழ்க்கையாங்க. வாழ்க்கை என்றால் எப்படி  இருக்க வேண்டும்? யாதோ பிறந்தோம்...இருந்தோம்... வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாதுங்க. எந்தக் கவலையும் இல்லா வாழ்க்கை  வாழணுங்க... கவலை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைதான். ஆனால் இவை எல்லாம் நடக்குமா? நல்வினையோ தீவினையோ எல்லாம் இறைவன் செயல். நல்வினை எல்லாம் இறைவன் செயல். தீவினையுமா...? தீவினையும் அவன் செயல் என்றால் சற்று நெருடலாக இருக்கிறதே என்று கேட்கத் தோன்றும். " பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும் பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராய் இருப்பவர் இறைவன்" என்று பைபிளில் வாசிக்கவில்லையா? அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி? ஒன்றும் செய்யமுடியாது. அதுவும் இறைவன் கையில்தான் இருக்கிறது. இறைவனிடம் முரட்டுக் பக்தன் பிடிவாதம் பிடிப்பதுபோல பிடிவாதமாகக் கேட்டால் கண்டிப்பாக இறைவன் ...

ஓணான் பனைமரம் ஏறுமா?

Image
ஓணான் பனைமரம் ஏறுமா? ஓணான்  பனைமரம் ஏறுமா? ஏன் ஏறாது.....பனைமரம்  சொரசொரப்பானதாக இருக்கும் என்பதால்   பனைமரத்தில் ஓணான் ஏறாது என்கிறீர்களா? பனை மரத்தில் ஓணான் ஏறியதைப் நானும் பார்த்ததில்லை. ஆனால் பனை மரத்தில் ஓணான் ஏறும் என்பதை நான்  அடித்துச் சொல்லுவேன்.. ஓணான் பனைமரம் ஏறும்...ஏறும்...ஏறும். ஏழாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் ஒரு ஓணான் கணக்கு இருக்குதுங்க... அதில் ஓணான் பனை மரத்தில் ஏறிய கணக்கு ஒன்று இருந்தது. அது இன்றும் பசுமரத்தாணி போல என் நினைவில் பதிந்துள்ளது. பாடல் வேண்டுமா?இதோ உங்களுக்காக.... " முப்பத்தி ரண்டு முழம்உள முட்பனையைத் தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச். - செப்பமுடன் சாணேறி நான்கு விரற்கழியும் என்பரே நாணா தொருநாள் நகர்ந்து " என்று காரி நாயனார் கணக்கதிகாரம் என்ற நூலில் சொல்லியிருக்கிறாரே! இப்போவாவது  ஓணான் பனைமரம் ஏறும் என்பதை நம்புகிறீர்களா? நம்மிபிட்டோம்ப்பா... நம்பிட்டோம்.  அது என்னவோ ஓணான் பாடல்   என்றீர்களே அதற்கு என்ன ஆதாரம்? சபூத் சாயியே சபூத்? சபூத் சாயியே கியா சபூத்? ஆதாரம் வேண்டுமா? ஆதாரம் இல்லை என்றால்  நம்பமாட்டீ...

யானைகள் எத்தனை?

Image
 யானைகள் எத்தனை? நானும் என் தம்பியும் ஓய்வு நாளை மகிழ்ச்சியாகக் களிப்பதற்காக காட்டிற்குச் சென்றோம். போகும் வழி எங்கும் உள்ள காட்சிகளைப் படம் பிடித்தபடி நடந்தோம். தொலைவில்  யானைகள் கூட்டமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அப்படியே கிலிபிடித்தபடி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டான் என் தம்பி. ஒருபோதும் இத்தனை யானைகள்  கூட்டமாக வருவதை நானும் பார்த்ததில்லை. எனக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது. என்ன செய்வது? இருவரும் ஓடி விடலாமா என்று  ஒரு கணம் நினைத்தோம். இருந்தாலும் காட்டைச் சுற்றிப்  பார்க்காமல்  அப்படியே திரும்பிச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று ஒரு அசட்டுத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, "தம்பி வா! இந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வோம். யானைகளால்  மரம் ஏற முடியாது. அதனால் பத்திரமாக  யானைகள் கடந்து போகும் வரை நாம் மரத்தின் மேல் இருந்து கொள்ளலாம். .அதோடு மரத்தில் இருந்தபடி யானைகள் எங்கே போகின்றன? என்ன விளையாட்டு காட்டுகின்றன என்பதையும் கண்டு மகிழலாம் "என்றேன். "உண்மையாகவே யானைக்கு மரம் ஏறத்தெரிய...

பலாப்பழத்தை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா?

Image
பலாப்பழத்தை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா? மா , பலா , வாழை முக்கனிகள்  என்று சொல்லும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மேலிடும்.  மூன்றுமே அனைவருக்கும் பிடித்தமான பழங்கள் தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை.  இதில் பலாப்பழம் என்றாலே நாவில் தேனூறும். பலாப்பழம் தொலைவில் இருக்கும்போதே நான் இங்கு இருக்கிறேன் என்று  மணத்தைத் தூதாக அனுப்பி  நம்மை அழைக்கும்.  கால்கள் அந்த இடத்தை நோக்கி நகரும். கண்கள் எங்கே பலாப்பழம்? எங்கே பலாப்பழம் ? என்று ஆலாய்ப் பறக்கும். இதுதாங்க பலாப் பழத்துக்கான சிறப்பு. இப்படிப்பட்ட பலாப்பழத்தை என்ன விலை கொடுத்தேனும் வாங்கி வந்து சாப்பிட ஆசை. வாங்கி வந்தாயிற்று. பழத்தை வாங்கி வந்து வெட்டிப் பார்த்தால் உள்ளுக்குள் சுளையையே காணோம். பூந்தியுள் கையைப் போட்டுத்  துழாவித் துழாவிப் பார்த்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐம்பது சுளை கூட தேரவில்லை. அப்படியே ஏமாந்து போயிருப்போம். இந்த வியாபாரி என்னை நன்றாக ஏமாற்றிவிட்டார் என்று  வசைபாடிவிட்டு பூந்தியை எடுத்து வழித்து நக்கி நமது பலாப்பழ ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு...

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து சிந்தும் சிரிப்பலையோ முந்தும்  முன்னலையோ எட்வினின்   நகல்  இவனோ அகவை ஒன்று ஆகுமுன்னே அலைபேசி தொழில்நுட்பம்  அறிந்த அறிஞன் இவன் என்பேனோ? எட்டெடுத்து  வைக்குமுன்ன பதினாறடி பாயும்  மருள்மானோ? ஜெஸ்வின் என்பதுன் பெயரோ எழில் கொஞ்சும் கலையோவியமாய் - எம் இல்லம் வந்த துரைதான் நீயோ புரட்டும் நாவொலி உனதோ-உன் உருட்டு மொழிதான் தமிழோ வாழ்த்தொலி கேட்டலால்  வந்ததிந்த மகிழ்வோ? வாழ்த்தும் உள்ளங்கள் வாய்த்ததுன் நற்பேறோ? உள்ளம் உவக்க  இல்லம்கூடி வாழ்த்துகிறோம்! நோய்நொடியில்லா நாட்கள் உனதாக இன்றுபோல் என்றும் மகிழ்ந்து வானும் நிலனும்போல  வாழ்வாங்கு வாழ்க....! பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழும் பரம்பரை என்னும்  நிலைத்த பெயர் எமக்குத் தந்து!

தமிழால் இணைவோம்

Image
தமிழால் இணைவோம்  "தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்..." பாடலில் நெஞ்சைப் பறிகொடுக்காதவர் எவருமிலர். பாடல்தான் இனிமையா? எங்கள் தமிழ் அதைவிட இனிமை. "இமிழ் கடல் சூழ் உலகெங்கும் போய் வாழ்ந்தாலும் எந்தமிழர் தமிழ் மொழியால் இணைந்து கொள்க" என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அப்படி என்ன தான் இருக்கிறது தமிழ் மொழியில் என்று கேட்பவர்கள் இல்லாமல் இல்லை. என்ன தமிழ்....தமிழ்...என்கிறீர்கள்? தமிழ் நமக்கு என்ன தந்தது? தமிழ் படித்ததால் வாழ்வில் எவற்றையெல்லாமோ  இழந்து போனோம் என்று புலம்பிய நாட்கள் உண்டு. இவை எல்லாம் ஒரு காலக்கட்டத்தில் காணாமல் போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள்  இல்லா நாடுகளே இல்லை என்னும்  அளவுக்கு உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் தமிழர்கள்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வாழ்வைத்தேடி வாழ்வாதாரத்தைத் தேடி உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெருமைக்குரியது. பெருமிதப்படக்கூடியது  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. . வீட்டை நாட்டைத் துறந்து அந்நிய தேசத்தில் வந்து குடியமர்ந்து விட்டோம். பொருளாதாரத்...

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

Image
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு முன்னுரை :  பாரதி என்ற மூன்றெழுத்து நாமத்தை உச்சரிக்கும்போதே நம்முள்  உணர்ச்சிப் பொங்கும். உத்வேகம் எடுக்கும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல்  தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக  மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டியவர்  பாரதி.தனது சிந்தனைகள் மூலமாக மக்களைத்   தட்டி எழுப்பியவர்.தூங்கிக் கிடந்த சமுதாயத்தைத்   துயிலெழ வைத்தவர்.   விடுதலைப் போராட்டத்தில் பாரதியின்   பங்கு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.  இளமைப் பருவம் :  தென் தமிழகத்தின் எட்டையபுரம் என்ற ஊரை உலகமெங்கும் எட்டிப் பார்க்க வைத்த பெருமை பாரதிக்கு  உண்டு. 1882 ஆம் ஆண்டு  டிசம்பர் திங்கள் பதினோராம் நாள் சின்னச்சாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் சுப்பிரமணியன் என்ற பெயர் சூட்டி, சுப்பையா என்று வாயார அழைத்து மகிழ்ந்து வந்தனர். தனது பள்ளிப் பருவத்திலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்ததைக் கண்ட  எட்டையபுரம் சமஸ்தான புலவர்கள் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினர். அன்றுமுதல் ச...

நாராய் நாராய்....

Image
  நாராய் நாராய் செங்கால் நாராய்.... ஒவ்வொரு செய்திக்கும் ஏதோ ஒரு பின்னணி இருக்கும். ஒரு காட்சியோ நிகழ்வோ ஒருவருடைய உள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்போதுதான் அது சொற்களாக வெளிவரும். இப்படி உருவானவைதான் பாடல்கள்,  சிறுகதைகள், நாவல்கள்  , கட்டுரைகள் , காப்பியங்கள் என்று வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு கோணங்களில்  வெவ்வேறு இலக்கிய வடிவங்களாக இன்று நம்மோடு உலவிக் கொண்டிருக்கின்றன. இங்கே ஒரு புலவர் ஒரு பாடல் என்று பாடுகிறார். அந்த ஒற்றைப் பாடலில் நம் உள்ளங்களைக் கற்றையாக அள்ளிக் கொண்டார் என்றால் அது மிகையாகாது.  பாடல் யாரிடம் பாடப்பட்டது என்று கேட்டால் அசந்து போவீர்கள். ஒரு நாரையை தன் மனைவியிடம்  தூது போகச்  சொல்கிறார் புலவர். நாரையிடமா? ஏன் மேகத்திடம் தூது போகச் சொல்லும்போது நாரையிடம் தூது போகச்  சொல்லக் கூடாதா என்ன? சொல்லலாம்...சொல்லலாம். தாராளமாகக் சொல்லலாம் என்கிறீர்களா? சாதாரண நாரை தானே என்று  நீ போ . போய் கண்டேன் உன் காதல் மணாளனை  என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு  வா என்று  சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் இ...

வஞ்சகப் புகழ்ச்சி அணி

வஞ்சகப் புகழ்ச்சி அணி புகழ்ச்சி தெரியும். இது என்ன...வஞ்சகப் புகழ்ச்சி! ஏதோ நெருடலாக இருக்கிறதே. வஞ்சகத்தோடு இருக்கும் ஒருவரால் புகழ்ந்து பேச முடியுமா ?  பேச முடியும். நயவஞ்சகம் பற்றி தெரியுமல்லவா! நயமாகப் பேசி நம்மை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் இல்லையா? இந்த நயவஞ்சகத்திற்கும் வஞ்சகப்புகழ்ச்சிக்கும் பெரிய வேறுபாடு இல்லைங்க. ஒருவரைப்   புகழ்வது போல பழிப்பது. பழிப்பது போல புகழ்வது. அதாவது எள்ளல். ஒருவரை எள்ளி நகையாடுவது பள்ளிப் பருவத்திலிருந்தே நமக்குக் கைவந்த கலைதான். அதுவும்  அவர்களுக்கு வலிக்காதபடி பேசுவது ...ஒருவகையில் பொடி வைத்துப் பேசுவது என்றே வைத்துக் கொள்வோம். பேசுபவர் பேசிவிடுவார். மேலோட்டமாக பார்த்தால்  பொருள் இருக்கும். உடனே நமக்குப் புரியாது. நாமும் சேர்ந்து சிரிப்போம். வீட்டிற்கு வந்த பின்னர்தான் எங்கோ பொறியில் தட்டுவதுபோல  இருக்கும். அவன் என்னை நக்கலடித்திருக்கிறான். நானும் முட்டாள் மாதிரி சிரித்துவிட்டு  வந்திருக்கிறேனே என்று நம்மையே நொந்து கொள்வோம்.  இது நம்மில் பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகத்தான் இருந்திருக்கும். இதைத்தான் வஞ்சகப் ப...

கெத்து காட்டும் செட்டு

கெத்து காட்டும் செட்டு பொய் சொல்லுவதுன்னா சந்திராவுக்கு  ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் பேசுவதற்கு ஆள் கிடைத்துவிட்டால் போதும்  சும்மா அளந்து விடுவாள்.  பொய் சொல்லி கெத்து காட்டியே பொ. சந்திரா பொய்ச் சந்திரா என்ற பெயரை வாங்கி வைத்திருந்தாள். ஒரு நாளைக்கு ஒரு பொய்யாவது சொல்லவில்லை என்றால் பொய்  சந்திராவின் தலையே வெடித்துவிடும். தனியாக பொய் பேசியதில் ஒரு திரில் இல்லை என்பாள் . அதனால் பொன்மணியையும் தோழியாக சேர்த்துக்கொண்டு  கெத்துகாட்டிக்கொண்டு திரிவாள். சந்திராவும் பொன்மணியும் கழுத்தில் கையைப்போட்டு செட்டாகத்தான் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிவார்கள்.  துஷ்டனைக் கண்டால் தூர விலகு  என்ற மாதிரி தூரத்தில்  சந்திரா அண்ட் கம்பெனியைக்  கண்டாலே பிள்ளைகள் விலகி   ஓடிவிடுவர்.     சில மாணவிகள் தங்களுக்குள்  ஏதாவது சொல்லி சிரித்துக் கொண்டே விலகிச் செல்வர். அப்படி தங்களைப் பார்த்து யாராவது சிரிப்பதைக்  கண்டுவிட்டால் போதும். பின்னாலேயே வலியச் சென்று "எதுக்குச் சிரிச்சா...எதுக்கு சிரிச்சா...இப்போ நின்னு  சொல்லிட்டுப் போ..." பின...

புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும்.....

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் ...... புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்  யாக்கை அகத்துறுப்பு அன்பி   லவர்க்கு. "                                         குறள் :  79 புறத்து உறுப்பு - வெளி உறுப்பு எல்லாம் - அனைத்தும் எவன்செய்யும் - என்ன செய்யும் யாக்கை - உடம்பு அகத்துறுப்பு - உள்ளுறுப்பு அன்பில் - அன்பு இலவர்க்கு - இல்லாதவர்க்கு உடம்பின் அகத்துறுப்பு என்று  கருதப்படும் அன்பு இல்லாதவருக்கு புறத்துறுப்புறுப்புகள் இருந்தும் அவற்றால் எந்த பயனும் இல்லை. விளக்கம் : மனத்தின்கண் இருக்க வேண்டிய முக்கியமான உறுப்பு ஒன்று உண்டென்றால்  அது அன்பு மட்டுமே. அன்பு என்ற அகஉறுப்பு உள்ளிருந்து இயக்கும்போதுதான் மற்ற புறஉறுப்புகள் எல்லாம் சீராக இயங்கும். அது என்ன அன்பு இல்லை என்றால் புறத்துறுப்புகள் எல்லாம் சீராக இயங்காதா என்றால் ....ஏன் இயங்காது? இயங்கும். ஆனால் அவற்றின் இயக்கத்தால் யாருக்கும் எந்தப் பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. அன்பால் இயக்கப்பட்டால்தான் புறத்துறுப்புகளால் ...